உலகத்தின் கடைக் கோடி வரை தடம் பதித்து வாழும் அனைத்து தமிழ் சார்ந்த நெஞ்சங்களுக்கும் “இந்தியா மீடியா அவுஸ்” குழுமத்தின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்கள் நல்லாசியோடு “இந்தியா மீடியா அவுஸ்” பயணம் இன்று முதல் இனிதே தொடங்கி இருக்கிறது.
சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பிரச்சனைகளை மக்களின் பார்வைக்குக் கொண்டு சென்று அலச வைப்பதும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும், இந்த சமூகத்திற்கு முன்மாதிரி மனிதர்களையும், புதிய புதிய சாதனையாளர்களையும் அடையாளப்படுத்துவதுமே எங்களின் பிரதான நோக்கம்!
அதே நேரத்தில் வணிகர்களின் வளர்ச்சியையும் நாங்கள் முதன்மைப்படுத்துகிறோம். வணிக நிறுவனங்கள் ஆற்றும் சேவையையும், சிறப்புகளையும் மக்களின் விழிகளுக்கும் இதயத்துக்கும் நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதையும் நாங்கள் கடமையாகக் கருதுகிறோம்! இதற்கு “இந்தியா மீடியா அவுஸ்” களம் அமைத்துத் தருகிறது.
அதேவேளை, “இந்தியா மீடியா அவுஸ்” குழுமத்தை மக்கள் தங்களது உரிமையான மற்றும் உண்மையான ஊடகமாகக் கருதலாம். இந்த சமூக மாற்றங்களுக்கான தீர்வை எங்கள் மூலமாகவும் நீங்களும் முன்மொழியலாம். நீங்களும் எழுத “இந்தியா மீடியா அவுஸ்” களம் அமைத்துத் தருகிறது. உங்கள் திறமைகளை எங்கள் தளத்தில் களமாடலாம். இந்த மீடியா, நிறைய சுவாரஸ்யங்களையும் தரும்.
மீண்டும் மீண்டும் சொல்ல நினைக்கக்கூடிய விசயம், எந்த சார்புத் தன்மையும் இல்லாமல், மக்களின் மனதுக்கு நெருக்கமான விஷயங்களைப் பேசுவதுடன் வணிகர்களின் வளர்ச்சிக்கும் உதவுவது தான் எங்களின் நோக்கம்.
நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் உங்கள் ஆதரவைத் தான். பெரிய பொருளாதார பலமின்றி சமூக நோக்கும், எழுத்தார்வமும் கொண்ட இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் இதழியல் தளம் இது. இதன் அடித்தளத்தைப் பலப்படுத்தி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வணிகப் பெருமக்களின் ஆதரவை நாடுகிறோம். கூடவே, ஆலோசனையும் சொல்லி இதன் சரியான பாதையைப் பண்படுத்த மக்களின் அன்பையும், ஆதரவையும் நாடுகிறோம்.
இது உங்களுக்கான தளம். நீங்களும் இந்த தளத்தில் எழுதலாம். தனி நபர்களுடைய மனதைப் பாதிக்காமல் சமூக அக்கறையும், ஆதங்கமுமான கட்டுரைகளை, செய்திகளை வரவேற்கிறோம். கதைகள், கவிதைகள் கூட அனுப்புங்கள். சுவாரஸ்யமான அனைத்துப் படைப்புகளும் தகுந்த முக்கியத்துவத்தோடு வெளியாகும். தொடர்ந்து உங்கள் படைப்புகளையும், விளம்பரங்களையும் தந்து ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!
சந்திப்போம்..!
என்றும் உங்களின்
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
indiamediahouse@gmail.com
whatsapp – 9150493073