கார்த்திக் முனுசாமிக்கு கைதான நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் அந்த பெண்ணுடன் சேர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள.
பெண் தொகுப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான அவரை இன்று காலையில் இருந்து மதுரவாயல் காவல் நிலைய கட்டிடத்தில் வைத்து கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள், உதவி ஆணையர் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அத்துடன், பெண் தொகுப்பாளர் கொடுத்த புகார் குறித்து கார்த்திக் முனுசாமியிடம் துருவி துருவி மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அவரின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர். கைதான கார்த்திக் முனுசாமியை விஷூவல் எடுப்பதற்காக மதுரவாயல் காவல் நிலைய வாசலியே ஊடக ஒளிப்பதிவாளர்கள் காத்திருந்தனர். ஆனால், வெளியே அவரை போலீசார் அழைத்து செல்லவில்லை.
பிறகு கார்த்திக் முனுசாமி முக கவசம் அணிந்து போலீசாரின் ரோந்து வாகனத்தில் பின் இருக்கையில் அமரவைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஊடக ஒளிப்பதிவாளர் கார்த்திக் முனுசாமியை விஷூவல் எடுக்க முயன்றனர்.
போலீசார் அவரது முகம் கேமராவில் பதிவாகி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள் என்றே சொல்லலாம். கார்த்திக் முனுசாமி முகம் கேமராவில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் போன்றவை ஒட்டினர்.
ஒளிப்பதிவாளர் விஷூவல் எடுப்பதையடுத்து உடனடியாக போலீசார் அவரை ஒரு காரில் இருந்து மற்றொரு போலீஸ் வாகனத்திற்கு மாற்றி அவசர அவசரமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ஓடினர். இதையடுத்து அவரை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், கார்த்திக் முனுசாமிக்கு மீண்டும் அந்த பெண்ணுடன் சேர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள.