Sun. Dec 22nd, 2024

கோட்டை யாருக்கு?! ஆட்சியா? எதிர்க்கட்சியா? – நாளை முடிவு

By indiamediahouse Jun4,2024

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், “ஆட்சியா? எதிர்க்கட்சியா? என நாளை முடிவு செய்யப்படும்” என்று, ராகுல் காந்தி அறிவித்து உள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எந்த தொகுதியில் ராஜினாமா செய்வது என்பது குறித்து தற்போது முடிவெடுக்கவில்லை; என்றும், உத்தரப் பிரதேச மக்கள் அரசியல் அறிவை கண்டு பிரம்மிக்கிறேன்” என்றும், பேசினார்.

அத்துடன், “INDIA கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி, குறிப்பாக உத்தரப் பிரதேச மக்களுக்கு நன்றி என்றும், உத்தரப்பிரப் தேசத்தில் INDIA கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி காரணம்” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக இந்த தேர்தலை சந்தித்தோம் என்றும், ஏழைகளுக்கான, தேசத்திற்கான தொலை நோக்குத் திட்டத்துடன் மக்களை அணுகினோம்” என்றும், ராகுல் பேசினார்.

“பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவும் போது, தொழிலதிபர் அதானியின் பங்கு வீழ்ச்சி அடைகிறது என்றும், ஏழை மக்களின் பணம் அதானிடம் சென்றதற்கு வேறு சான்று தேவையில்லை” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.

அத்துடன், “எங்கள் யுக்தி என்ன என்பதை இப்போதே சொன்னால் எதிர் கட்சியினர் உஷார் ஆகி விடுவார்கள் என்றும், மக்களவைத் தேர்தல் ஒரு அரசியல் ரீதியிலான தேர்தல் கிடையாது” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.

“பாஜக மட்டுமின்றி சிபிஐ, அமலாக்க துறை போன்ற விசாரணை அமைப்புகளை எதிர்த்து நின்று வென்றுள்ளோம் என்றும், INDIA கூட்டணி கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் நெஞ்சார்ந்த நன்றி” என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

குறிப்பாக, “ஆட்சி அமைக்க உரிமை கோருவதா? அல்லது எதிர்க்கட்சியாக இருப்பதா? என்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று, திட்டவட்டமாக ராகுல் காந்தி கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *