கருமாரியம்மன் கோயிலுக்குள் சில பெண்கள் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து ஆட்டம் பாட்டம் கும்மாளமாக இருந்த வீடியோ வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் புற நகர் பகுதியாக இருக்கும் திருவேற்காடு பகுதியில்தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருகு்கிறது. திருவேற்காடு என்றாலே அம்மன் கோயில் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அப்படியான அந்த அம்மன் ஆலயத்தில் தான் இந்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.
திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்தை பொறுத்தவரையில் சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிவித்துவிட்டு செல்கின்றனர்.
இவ்வளவு பிரசித்திப் பெற்ற இந்த ஆலயயத்தின் ட்ரஸ்டில் இருக்கும் கோயில் தர்மகர்த்தா வளர்மதி, சமீபத்தில் வெளியிட்டுள்ள ரீல்ஸால் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, வளர்மதி, அம்மன் ஆலய வளாகத்தில் சக அறநிலையத்துறையில் பணியாற்றும் 12 பெண்களுடன் சேர்ந்து சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ரீல்ஸ் எடுத்து போட்டிருக்கிறார்.
அரசு திரைப்படத்தில் கோயிலில் வடிவேல் வேலை செய்வது போல் அவர் நடித்து இருப்பார். வடிவேலுவிற்கு திடீரென அரசு வேலை கிடைத்தவுடன் “இந்தாங்க எனது ராஜினாமா கடிதம்” என கொடுத்துவிட்டு அங்கிருந்த அனைவரையும் கலாய்த்துவிட்டு செல்வார்.
இதே பாணியில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் வடுவேல் படத்தில் வரும் டயலாக்கிற்கு தர்மகர்த்தா வளர்மதி மற்றும் அவருடன் சேர்ந்து 12 ஊழியர்களுக்கும் ரீல்ஸ் நடித்து உள்ளனர்.
இதில், “இந்தாங்க எனது ராஜினாமா கடிதம்” என, வடிவேல் கூறும் டயாலாக்கிற்கு நிஜ கோயில் ஊழியர்கள் தனது ஐடி கார்டை வீசி நடித்துக் காட்டி உள்ளனர். அதே போல், தர்மகர்த்தா வளர்மதியை புகழ்ந்தும், நடித்து விடியோக்களை வெளியிட்டு உள்ளனர்.
தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோயில் வளாகத்தில் கேமிரா பயன்படுத்த கூடாது, செல்போனில் புகைப்படம் எடுக்க கூடாது என்று, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், கோயிலில் நிர்வாகிகளுக்கும், சக ஊழியர்களுக்கும் மட்டும் ரீல்ஸ் போட விடியோ எடுக்க யார் அனுமதித்தார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்து உள்ளது.
அதேபோல் மன நிம்மதிக்காக ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு இந்த செயல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் சம்மந்தப்பட்ட 12 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதனிடை்யே, சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் லூட்டி அடித்து ரீல்ஸ் வெளியிட்டு இருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.