நடிகர் ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு இயக்குனர் பா ரஞ்சித் நக்கலா சித்த வீடியோ வைரலான நிலையில், “இப்படி நக்கலா சிரிக்கலாமா? நன்றி கெட்ட பா ரஞ்சித்” என்று, ரஜினி ரசிகர்கள் கொதித்தெழுந்து உள்ளனர்.
தன்னுடைய ஒரே ஒரு நக்கலான சிரிப்பால், ரஜினி ரசிகர்களிடம் வசமாக தற்போது சிக்கி வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார் இயக்குநர் பா ரஞ்சித்.
மிக வித்தியாசமான காதல் கதையை, “அட்ட கத்தி”யில் வைத்து, இயக்குநராக அறிமுகமானார் பா ரஞ்சித். அதன் தொடர்ச்சியாக, தனது வித்தியாசமான கதை களத்தால் கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” படத்தை இயக்கியிருந்தார்.
இப்படியாக, அவரது முதல் இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் கவனம் ஈர்த்ததால், அடுத்து 3 வது படம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “கபாலி” என்னும் மெகா ஹிட் படத்தை இயக்கினார்.
இப்படி வெளியான படங்கள் தான் “கபாலி”, “காலா” . இப்படி, தன்னோட படங்கள்ல தலித் அரசியல் பேசுறது தான் பா.ரஞ்சித்தோட ஐடியாலஜி என்ற கடுமையான விமர்சனங்களும் இங்கு உண்டு.
இந்நிலையில் தான், புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்த, தலித் வரலாற்று மாதமா பா. ரஞ்சித்தோட நீலம் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது. அப்படி நடந்த வானம் கலைத் திருவிழாவுல இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தலித் சினிமா பற்றி பா.ரஞ்சித்துடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில், ரஞ்சித்திடம் ‘ “கபாலி”, ”காலா” இரண்டும் தலித் அரசியல் பேசுற படங்கள்ன்னு தெரியாமலயே ரஜினி நடிச்சாரா?’ என்று, கேள்விக் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காத பா.ரஞ்சித், அந்த கேள்வி கேட்ட மறுகனவே அப்படியே நக்கலா சிரிக்க, அங்கு கூடியிருந்த ரசிகர்களும், அங்கிருந்த ஆடியன்ஸும் பலமாக சிரிச்சு கை தட்டுறாங்க. இப்படியாக தான், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவ பார்த்த ரஜினி ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பா.ரஞ்சித்தை ரொம்பவே காட்டமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
“சூப்பர் ஸ்டார் ரஜினியோட ரேஞ்ச் என்ன?, இளம் இயக்குநர்ன்னு கூட பார்க்காமல் தன்னோட படங்கள டைரக்ட் பண்ற சான்ஸ பா.ரஞ்சித்துக்கு கொடுத்து அழகுப் பார்த்தார் ரஜினி. ஆனால், இதையெல்லாம் அப்படியே மறந்துட்டு, இப்படி நன்றி கெட்டுத் தனமா அவர் சிரிக்கிறதெல்லாம் நல்லா இருக்குதா? என்று கொந்தளித்து வருகிறார்கள்.
மேலும், “நன்றி கெட்ட ரஞ்சித்-னு ஹேஷ் டேக் போட்டு, ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள். இதனால் பா ரஜித் நக்கலாக சிரிக்கிற வீடியோவையும் பார்க்க முடியுகிறது.
குறிப்பாக, “மனிதன், எந்த உயரத்துக்கு போனாலும், முதலில் நல்ல பண்புகளை வளர்த்துக்கோங்க ரஞ்சித்-னு” பலரும் அட்வைஸ் பண்ணி வருகிறார்கள்.