‘கிறிஸ்தவர்’ என்ற அரசியல் ரீதியிலான விமர்சனனத்திற்கு, இந்து மக்களுக்காக ‘சாய் பாபா’ கோயில் கட்டிகொடுத்து நடிகர் விஜய் பதிலடி கொடுத்து உள்ளார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டிற்கு புதிது இல்லை. என்றாலும், “அரசியலுக்கு வருகிறேன்.. வருகிறேன்..” என்று சொன்னவர்களுக்கு மத்தியில் திடீரென்று அரசியலில் குதித்திகிறார் நடிகர் விஜய்.
அரசியலுக்கு அடியெடுத்த வைத்த கையோடு, தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சென்னை கொரட்டூரில் ‘சாய்பாபா கோயில்’ ஒன்றை சத்தமே இல்லாமல் கட்டி உள்ளார்.
சமீபத்தில் கூட நடிகர் விஜய், சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்வதுபோன்ற புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. நடிகர் விஜய், இந்த கோயிலைக் கட்டியதற்கு காரணமும் உண்டு.
சென்னை கொரட்டூரில் விஜய்க்கு சொந்தமாக நிலம் ஒன்று இருந்திருக்கிறது. அந்த இடத்தில், சுமார் 8 கிரவுண்டில் தான் சாய்பாபா கோயிலைக் கட்டியுள்ளார் விஜய். என்ன தான் நடிகர் விஜய் கிறிஸ்தவ மதத்தைப் பின்னணியாகக் கொண்டவராக இருந்தாலும், தன்னைக் குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவர் போலவே விஜய் காட்டிக் கொண்டதில்ல. ஆனாலும், நடிகர் விஜய் ‘கிறிஸ்தவர்’ என்ற விமர்சனம் அரசியல் ரீதியாக அமர் மீது சுமத்தப்பட்டது. அந்த கரையை சாய் பாபா கோயில் கட்டி கொடுத்ததின் மூலமாக, நடிகர் விஜய் போக்கியிருக்கிறார்.
அதாவது, நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, தீவிர சாய்பாபா பக்தர் என்று சொல்லப்படுகிறது. ஷோபா, தனது மகன் விஜயிடம் “ஒரு கோயிலைக் கட்ட வேண்டும்” என்று, நீண்ட நாட்களாகவே சொல்லி வந்திருக்கிறார்.
அதன் காரணமாகவே, விஜய் இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார். இதன் கும்பாபிஷேகம் கூட கடந்த மாதம் 11-ம் தேதியே சத்தமே இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. அத்துடன், இரவு நேரங்களில் அவ்வப்போது மன சாந்திக்காக நடிகர் விஜய் இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுச் செல்வார் என்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.இந்நிலையில், மகன் விஜய் கட்டிய கோயிலுக்கு அவரது தயாார் ஷோபா சில நாட்களுக்கு முன்பு வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமது நீண்ட நாள் ஆசையை விஜய் நிறைவேற்றியிருக்கிறார்” என்று நெகிழ்ச்சுடன் கூறினார்.
மேலும், “தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய மகன் விஜய்” என்றும், பூரித்துப் போய் பேசினார். அதன் தொடர்ச்சியாக, சென்னை மக்கள் அம்பத்தூர் அருகே உள்ள கொரட்டூர் சாய்பாபா கோயிலுக்கு தினமும் படையெடுத்து வருகிறார்களாம்.