Sun. Dec 22nd, 2024

“நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை!” நடிகை பாவனா ஆதங்கம்..

By Aruvi Apr14,2024

“நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று, நடிகை பாவனா ஆதங்கத்துடன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

கேரளாவை உலுக்கிய நடிகை பாவனா வழக்கு அனைவருக்கும் தெரியும். நடிகர் திலீப் மீது நடிகை பாவனா தொடர்ந்த பாலியல் வழக்கு இன்னும் முடிந்தபாடு இல்லை. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக தற்போது வரை ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் நடிகை பாவனா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அதன்படி, “ஒருவரின் தனியுரிமை என்பது, ஒரு நபரின் அடிப்படை உரிமை. ஆனால், நீதிமன்றக் காட்சிகள் அடங்கிய மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பால் பல முறை மாற்றப்பட்டு மறுக்கப்பட்ட எனக்கு இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமை உள்ளது” என்று கூறியுள்ளார்.

அத்துடன், “இந்த நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்து மிகவும் பயமாக இருக்கிறது” என்றும், வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.

“கோட்டை கட்டி, பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டிய நீதிமன்றத்திடம் இருந்து இப்படியொரு அசம்பாவிதம் வரும் போது, காயப்பட்டவர்களையும், காயம்பட்ட துரோகிகளையும் உடைத்தெறிவது வேதனைக்குரியது விசயம்” என்றும், அவர் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

“என்றாலும், நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையுடன், எனக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டத்தை தொடர்வேன் என்றும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடைசித் தூணாக இருக்கும் நமது நீதித்துறையின் புனிதம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் எனது பயணத்தைத் தொடர்வேன்” என்றும், நடிகை பாவனா கூறியுள்ளார்.

அந்த அறிக்கையின் இறுதியில் “சத்யமே வா ஜெயதே” என்றும், நடிகை பாவனா பதிவிட்டுள்ளார்.

By Aruvi

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *