பிடித்த பாம்பை அடர்ந்த பகுதியில் விட சென்ற பாம்பு பிடி வீரர், அதே பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் நெல்லி குப்பத்தை சேர்ந்த உமர் அலி, கடந்த 12 ஆண்டுகளாக வனத்துறை, தீயணைப்புத்துறையுடன் இணைந்து வீடுகளுக்குள் படை எடுத்து வரும் விஷ பாம்புகளை பிடித்து பொது மக்களுக்கு உதவி செய்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் தான், நேற்றைய தினம் வழக்கம் போல் உமர் அலிக்கு, அங்குள்ள முத்தையா நகரில் ஒரு வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து, அங்கு விரைந்துச் சென்ற உமர் அலி, அந்த வீட்டில் இருந்த பாம்பி பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடச் சென்றிருக்கிறார்.
அப்போது, பிடித்த நல்ல பாம்பை அடர்ந்த பகுதியில் விட முயன்ற போது, அந்த பாம்பு, அவரது கையை பதம் பார்த்து உள்ளது. இதில், எதிர்பாராத விதமாக அவர் பாம்பிடம் கடி வாங்கி உயிர் இழந்து உள்ளார்.
இதனிடையே, பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழந்த சம்பவம் கடலூர் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.