Mon. Dec 23rd, 2024

ராங் நம்பரால் ஏற்பட்ட 10 வருட காதல், சாதியை காரணம் காட்டி இளம் பெண்ணை ஏமாற்றியதன் விளைவாக முடிவுக்கு வந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் இப்படி ஒரு காதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்பு அமர்ந்து இளம் பெண்ணின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் விசாரித்த போது, நாகர்கோவில் அருகே மூங்கில் விளை பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான சந்தோஷ், சென்னை போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு செல்போன் எண்ணில் இருந்து சந்தோஷிற்கு போன் வந்து உள்ளது. அப்போது, மறுமுனையில் மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவர் பேசி உள்ளார். தொடர்ச்சியாக பேசிய அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்தனர்.

இதனையடுத்து, 2019-ஆம் ஆண்டு சந்தோஷ் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி இருக்கிறார். இதனையடுத்து, அப்பெண்ணும், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார்.

இதனால், அவர்கள் இருவரும் நெருங்கி பழகியதுடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை ரகசியமாக தனிமையிலும் வளர்த்து வந்து உள்ளனர். இதனால், அப்பெண் கர்ப்பமாகி 2 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சந்தோஷ் சாதியை காரணம் காட்டி, அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வந்து உள்ளார்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சந்தோஷ் மீது, சம்மந்தப்பட்ட அந்த பெண் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், விசாரணை நடத்தாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை அலைக்கழித்து வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறிதது அங்கு வந்த கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ஜெயராஜ், பெண்ணின் உறவினர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர், போராட்டம் கை விடப்பட்டது. இந்த சம்பவத்தால் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *