7 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து 17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டி வீட்டிலிருந்து வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த 17 வயது சிறுமி, வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், பயந்து போன அவரது பாட்டி கோவை உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து உக்கடம் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மறுநாள் சிறுமி வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
சிறுமி, மறுநாள் வீடு உடல் நிலை பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, அந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம், ஷேர் சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் சில இளைஞர்களுடன் பழகி வந்திருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நட்பாக மாறி இருக்கிறது.
இதனையடுத்து, அந்த இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள ஒரு அறைக்கு வருமாறு அந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்து உள்ளான். அந்த 17 வயது சிறுமியும், அவனை நம்பி அங்கு சென்று உள்ளார். ஆனால், அங்கு சென்ற சிறுமியை ஏற்கனவே அந்த அறையில் பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட கும்பல், கொடூரமாகவும், பலவந்தமாகவும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, அந்த சிறுமியை மறுநாள் வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதனால், நொந்து போய் கந்தலாகி கசங்கிப் போய் அந்த சிறுமி வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.
இதனையடுத்து, கடும் அதிர்ச்சியடைந்த உக்கடம் போலீசார், கோவை – பாலக்காடு சாலையில் உள்ள பிரபல கல்லூரி மற்றும் சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல கல்லூரியைச் சேர்ந்த 7 கல்லூரி மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த 7 பேர் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, கோவையில் 17 வயது சிறுமி கல்லூரி மாணவர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.