தேர்தல் நாள் நெருங்கும் நிலையில் சத்தீஸ்கரில் அதிரடியாக 29 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த திக் திக் சம்பவங்கள் எப்படி நடந்தது? என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்…
சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் தான் 29 மாவோயிஸ்டுகள் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்ட திக் திக் நிமிடக் வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் எப்போதும் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் என்று கூறப்படுவதுண்டு. அப்படி, சத்தீஸ்கரின் கான்கெர் தொகுதியில் வருகிற 25 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் தான், அங்குள்ள பினகுண்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆலோசனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலின் பேரில் மாநில போலீசாரின் மாவட்ட ரிசர்வ் படை உள்ளிட்ட 200 பேர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சிறப்பு குழுவுக்கு குடியரசுத்தலைவர் விருதுபெற்ற லக்ஷ்மன் கேதா என்பவர் தலைமை தாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்ட போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், அப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 29 மாவோயிஸ்டுகள் அதிரடியாக கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
“இந்த என்கவுண்டர் சம்பவம் அமைதியை உறுதி செய்வதற்கான மிகப்பெரிய முன்னெடுப்பு” என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்து போலீசாருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, பினகுண்டா வனத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த திக் திக் நிமிடக் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஒரு நிமிட வீடியோ இருக்கும் நிலையில், முதல் 20 விநாடிகள் வரை பேரமைதியாக இருக்கிறது.
இதனையடுத்து, மிக கடுமையான துப்பாக்கிச்சூடு நடக்கிறது. அப்போது, “இனி யாரும் பின்னால் இருந்து சுட வேண்டாம்” என்று, தனது சக பாதுகாவலர்களுக்கு இந்த வீடியோ எடுக்கும் நபர் உத்தரவிடுகிறார். அதோடு அந்த வீடியோவும் முடிகிறது..
அதாவது, இதுவரை 44 மாவோயிஸ்டுகளைக் கொன்ற என்கவுண்டர் Specialist-ஆன லக்ஷ்மன் கேவட், இந்தக் குழுவுக்கு ஆரம்பத்தில் இருந்தே தலைமை தாங்கி 29 பேர் கொல்லப்பட காரணமாக இருந்தார் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட சம்பவம், சத்தீஸ்கரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.