78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கோவையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோவை அடுத்த பேரூர் பகுதியை சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர், கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவரது பிள்ளைகள் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக, மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
78 வயது மூதாட்டியின் வீட்டருகே 41 வயதான பாலன் என்ற பாலமுருகன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவரது மனைவி, குடும்ப தகராறு காரணமாக பாலமுருகன் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக சென்று விட்ட நிலையில், இவர் மட்டும் தனிமையில் வசித்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் தான், பாலமுருகன் மூதாட்டியும் பக்கத்து வீடு என்பதால், அந்த பாட்டிக்கு தினமும் சின்னி சின்ன உதவிகளை செய்து வந்தார். இதே போல், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டியின் வீட்டில் பல்பு பீஸ் போய் உள்ளது. அப்போது, மூதாட்டி வேறு ஒரு பல்பை வாங்கிய நிலையில், அவரால் அந்த பல்பை மாட்ட முடியவில்லை. இதனால் கடந்த 22 ஆம் தேதி இரவில் பாலமுருகனை அழைத்து பல்பை மாட்டித் தருமாறு கேட்டு உள்ளார்.
அப்போது, வீட்டுக்கு சென்ற பாலமுருகன் பல்பை மாட்டிய நிலையில், பாட்டியை பார்த்து அவர் மீது சபலம் ஏற்பட்டு, அந்த மூதாட்டியின் கைகளை கயிற்றால் கட்டி போட்டு, அவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, “இதனை வெளியே சொல்லக் கூடாது” என்று, பகிரங்கமாக மிரட்டி உள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பாட்டி, பயந்து போய் இதனை வெளியே சொல்லாமல் இருந்து உள்ளார். ஆனால், அதனைத் தொடர்ந்து அந்த பாட்டியை பாலமுருகன், பல்வேறு முறை தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் மிகவும் பயந்து போன அந்த பாட்டி இரவில் தனது வீட்டில் படுக்காமல் அருகே உள்ள கோயிலுக்கு சென்று படுத்துக் கொண்டார்.
இது பற்றி, மூதாட்டியிடும் சிலர் விசாரித்த போது, தனக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை பற்றி கூறி அழுதிருக்கிறார். இதனால், அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.