புகழ்பெற்ற தபேலா இசை வித்துவான் உஸ்தாத் ஜாகிர் உசேன் தனது 73வது வயதில் காலமானார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு காலமானார்.
ஜாகிர் உசேன் 1988ல் பத்மஸ்ரீ, 2002ல் பத்ம பூஷன் மற்றும் 2023ல் பத்ம விபூஷன் ஆகிய பல விருதுகளை பெற்றுள்ளார். 1990 ஆம் ஆண்டு இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும், சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப், 2018 ஆம் ஆண்டு ரத்னா சத்யா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு அவர் மூன்று கிராமி விருதுகளைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
73 வயதான அவருக்கு ரத்த அழுத்தப் பிரச்சனை இருந்ததுள்ளது. இதன் காரணமாகக் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்றைய தினம் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.