தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரும் ஆபத்து நேர உள்ளதாக இந்திய புவி அறிவியல் அமைச்சகம் கடும் ! எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மழையும் அப்படி தான். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலமான தற்போது, வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்தே காணப்படுகிறது. பகல் வேளைகளில் பொது மக்கள் வெளியே நடமாட முடியாத சூழலே தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது. மழைக்காலம், பனிக்காலம் முடிந்து பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கிய முதலே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்துது வருகிறது. சென்னையை பொறுத்த வரையில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர காலத்திற்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு முன்னதாகவே வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இந்த சூழலில் தான், “தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்க உள்ளதாக” தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் தான், “2024 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்குப் பருவமழையின் போது, இந்தியா முழுவதும் இயல்பை விட மிக அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக” புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில், “நீண்ட கால சராசரியில் 106 சதவீதமாக இருக்கும் என்றும், இது 5 சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்” என்றும் கூறினார்.
அத்துடன், “1971-2020 தரவுகளின் அடிப்படையில், இந்தியா முழுவதும் பருவகால மழையின் நீண்டகால சராசரி என்பது, 87 செ.மீ.” ஆகும்.
மேலும், “வட மேற்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும், வடக்கு அரைக்கோளத்தில் இயல்பை விட குறைவான பனி உறைவு என்றும், 2024 ஆம் ஆண்டு தென் மேற்குப் பருவமழை காலம் மழைக்கு சாதகமாக இருக்கும்” என்றும், டாக்டர் ரவிச்சந்திரன் கூறினார்.
“வடக்கு அரைக்கோளம், யூரேசியா முழுவதும் குளிர்கால மற்றும் வசந்த கால பனி பரப்பளவு பொதுவாக அடுத்தடுத்த பருவ மழையுடன் தலைகீழ் தொடர்பைக் கொண்டுள்ளது என்றும், 2024 ஆம் ஆண்டு மே கடைசி வாரத்தில் பருவ மழைக்கான புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும்” என்று டாக்டர் மொஹபத்ரா கூறினார்.
வரப் போகும் மழைக் காலம் குறித்து புவி அறிவியல் அமைச்சகமே புதிய எச்சரிக்கை மணி அடித்திருக்கும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் மட்டுமில்லாமல், ஒவ்வொருவரும் முன்னெசரிக்கை உடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.