எல்லோருக்குமே ஆரோக்கியமான சருமத்தை கொண்டிருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் கொஞ்சம் மலிவாக இருக்கும் வகையில், இயற்கையான வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவார்கள்.
மெதுவாக பலனை கொடுத்தாலும் சருமத்தை ஆரோக்கியமாக தான் வைத்துக் கொள்ளும். ஆனால், ஐஸ் கட்டி கொண்டு முகத்தை மசாஜ் செய்வதன் உடனடியாக பலனை பெறலாம். தற்போது இந்த பதிவில் ஐஸ் கட்டி மசாஜ் செய்வதால் சருமத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
சுருக்கத்தை குறைக்கும்
சிலருக்கு போதிய நீர்ச்சத்து இல்லாததால் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் இருக்கும். ஆனால், ஐஸ் கட்டி கொண்டு மசாஜ் செய்யும்போது இரத்தம் ஓட்டம் அதிகரித்து, சுருக்கம் மற்றும் கோடுகள் அனைத்தும் மறைய தொடங்கும். தினமும் வெறுமனே 2 ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு காட்டன் துணியில் வைத்து வட்டவடிவமாக மசாஜ் செய்யுங்கள்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
தினமும் ஐஸ் கட்டியை கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது. இதனால் சருமத்தில் உள்ள நச்சுகள் வெளியேறிவிடும். நச்சுகள் வெளிவேறிவிடுவதால் சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை தரும். முதலில் முகத்தை தண்ணீரில் கழுவி, உலர்த்திக் கொள்ளவும். பிறகு, ஒரு துணியில் 3 ஐஸ் கட்டிகளை வைத்து மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரே திசையில் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும்.
பிரகாசமான சருமம்
முகத்தில் ஐஸ் கட்டியை கொண்டு மசாஜ் செய்வதால், இரத்தம் ஓட்டம் மேம்படும். இதனால் சருமத்திற்கு ஆக்ஸிஜன் சிறந்த முறையில் கிடைக்கும். இது சருமத்தின் பிரகாசத்தை மேலும் அதிகரிக்கும். எனவே, எந்த செலவும், பக்க விளைவுகளும் மினுமினுப்பான சருமத்தை பெற இதுவே சிறந்த வழி. கற்றாழை ஜெல்லை ஐஸ் க்யூபில் ஊற்றில் கட்டியானதும் அதை கொண்டு மசாஜ் செய்யலாம். இதற்கு துணியை பயன்படுத்த தேவையில்லை.
சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்யும்
சருமம் மென்மையாக இருக்க வேண்மென்றால், புதிய சரும செல்கள் உருவாக வேண்டும் மற்றும் இறந்த சரும செல்கள் நீக்கப்பட வேண்டும். அதற்கு எக்ஸ்ஃபோலியேட் முறை தான் எளிய முறை. எனவே, ஐஸ் க்யூபில் பாலை ஊற்றி கட்டியானது, அதைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் அனைத்து இறந்த சரும செல்களையும் அழிப்பதோடு, சருமத்திற்கு பிரகாசத்தையும் இயற்கையான பளபளப்பையும் தருகிறது.