இந்த காலத்தில் உண்மையான காதலை தேடிக் கண்டுபிடிப்பது என்பது ரொம்பவே கஷ்டமான காரியம் தான். ஏனென்றால், இன்றைக்கு காதலை ஒரு டைம்பாஸாக பயன்படுத்துபவர்களே அதிகம். இதனால், பிரேக் அப் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இருப்பினும், அனைவருமே அப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
சிலர் உண்மையாகவே காதலிக்கலாம். அப்படி காதலிக்கும் பெண், ஆண் பிரியும்போது ஏற்படும் உடல் மற்றும் மனதளவில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். இதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இருப்பினும் இந்த பிரேக் அப் வலியில் இருந்து பெண்களே வேகமாக மீண்டு வருகிறார்கள். அது எப்படி என்பதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்வோம்.
உண்மையாக நேசித்த ஒருவரை பிரிந்தால் பெண்கள் நிறைய அழுவார்கள். அந்த அழுகை தான் அவர்களை பிரேக் அப் வலியில் இருந்து சீக்கிரமே வெளியில் கொண்டுவருகிறது. ஏனென்றால், அவர்கள் அனைத்து வலிகளையும் அழுகையாலே வெளிப்படுத்து விடுகிறார்கள். ஆனால், ஆண்கள் அப்படி அழமாட்டார்கள்; அதற்கு பதிலாக மது போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.
பெண்கள் காதலனை பிரிந்துவிட்டதை நாட்கள் செல்ல செல்ல மெதுவாக புரிந்துக்கொள்வார்கள். கோபப்படமாட்டார்கள். ஆனால், ஆண்கள் தனக்கென்று யாரும் இல்லையே என்று நினைத்து நினைத்து தன் காதலி மீது அதிகமான வெறுப்பையும், கோபத்தையும் திணிப்பார்கள்.
ஆண்களுக்கு பெண்களை காட்டிலும் கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணம் அதிகமாக இருக்கும். இதுதான் அவர்களால் பிரேக் அப் வலியில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவிர்ப்பார்கள். இதன் விளைவு தான் ஆசிட் வீச்சு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அறங்கேற காரணமாக அமைந்துவிடுகிறது. ஆனால், பெண்கள் அதிகமான வலி, வேதனையை அனுபவித்தாலும் பழிவாங்கும் எண்ணம் குறைவு. அதனால் அவர்கள் பிரேக் அப் வலியில் இருந்து சீக்கிரம் வெளியில் வந்துவிடுகிறார்கள்.