ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி மற்றும் இவரது வெங்கட மாதவி. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 13 ஆண்டுகளாகி நிலையில், தெலங்கானாவின் மேட்சலில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த குருமூர்த்தி, அடிக்கடி அவரிடம் சண்டைபோட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி தனது குழந்தைகளை மாதவியின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கடந்த 16ந் தேதி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதவியின் பெற்றோர் ஃபோன் செய்த போது அவர் போனை எடுக்காததால், சந்தேகப்பட்டு அவர்கள் மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக குருமூர்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்தன. அதாவது, முதலில் தெரு நாய் ஒன்றை கொன்று குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்து பொடியாக்கி கால்வாயில் கரைத்ததுள்ளார்.
பின்னர் அதே பாணியில், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை வெட்டி துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்து, பிறகு யூடியூப் மற்றும் ஹாலிவுட் படங்களை பார்த்து உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து பொடியாக்கி கால்வாயில் கரைத்துள்ளார். மேலும், மீதமுள்ள எலும்புகளை ஏரியில் வீசியிருக்கிறார்.
இத்துடன், வீட்டில் இரத்தம் தெரியக்கூடாது என்பதற்காக குருமூர்த்தி, ரசாயனம் மூலம் வீட்டை கழுவியிருக்கிறார். இதை அனைத்தையும் வாக்குமூலமாக குருமூர்த்தி கூறியும் கால்வாயில் வீசப்பட்ட அவரது மனைவியின் உடல்பாகங்களை முடியவில்லை என்று தெலங்கானா காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில், இதேபோன்ற கொலை வழக்குகளை கையாண்ட வேறு மாநில தடய அறிவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு குருமூர்த்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து வீட்டில் இருந்து இரத்த மாதிரிகள் மற்றும் ஹீட்டரில் இருந்து தலைமுடி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குருமூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டதில், மனைவியை கொன்று உடல்பாகங்களை துண்டாக்கி அதில் சில பாகங்களை மட்டும் ஹீட்டர் உதவியுடன் வாளியில் தண்ணீரை கொதிக்க வைத்து அதை வேகவைத்து, பின்னர் மீண்டும் குக்கரில் வேகவைத்தது தெரியவந்துள்ளது.