Tue. Jul 1st, 2025

Bone Strength Food | எலும்புகள் பலம் பெற நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இவைதான்!

நாம் நிற்கவும், அமரவும், ஓடவும், நடக்கவும் உறுதுணையாக இருப்பதே எலும்புகள் தான். உண்மையை சொல்ல வேண்மென்றால் எலும்புகள் தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். இதை ஆரோக்கியமாகவும், வலிமையாக இருக்கவும் நாம் குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இத்தகைய உணவுகள் குழந்தை பருவத்தில் இருந்து வயதாகும் வரை எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இல்லையென்றால், எலும்புகள் சீக்கிரமே வலுவிழந்து தடுக்கி விழுந்தால் கூட எலும்பு உடையவும் முறியவும் வாய்ப்பிருக்கிறது. இதை தான் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்று சொல்வார்கள். இதை தவிர்க்க கீழ்க்காணும் உணவுகளை நீங்கள் கட்டாயம் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் பொருட்கள்

பால், தயிர், மோர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களில் நமது எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம் சத்து எக்கச்சக்கமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்ற வைட்டமின்களும் உள்ளன. எனவே, எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் இந்த பால் பொருட்களில் ஏதாவது ஒன்றை தவறாமல் குடித்து வாருங்கள். உங்கள் எலும்புகளுக்கு எந்த பிரச்சனையுமே வராது.

பால் பிடிக்காதா? இத சாப்பிடலாம்

சிலருக்கு லாக்டோஸ் இண்டாலரன்ஸ் என்ற பால் ஒவ்வாமை இருக்கும். இவர்கள் பால் பொருட்களை தொடவே மாட்டார்கள். இருப்பினும், உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்ய சோயா பால், அரிசி பால், பாதாம் பால் போன்ற தாவர அடிப்படையிலான ஆல்டர்னேட்டிவ்களை எடுத்துக் கொள்ளலாம்.

சில வகையான மீன்கள்

மீன்கள் என்றாலே ஆரோக்கியமானவை தான். இருப்பினும், மத்தி, சால்மன் மற்றும் டுனா போன்ற மீன்களில் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, சால்மன் மீனில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன. இவை இதயம், கண் மற்றும் மூளை போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். எனவே, வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த மீன்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

முட்டையின் மஞ்சள் கரு

எலும்புகளை வலுப்படுத்த முட்டையின் மஞ்சள் கருவும் உதவும். ஏனென்றால், ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 37 யூஐ வைட்டமின் டி உள்ளது. நமது உடல் கால்சிய சத்தை உறிஞ்சுவதற்கு இந்த வைட்டமின் டி மிகவும் முக்கியம். எனவே, தினமும் 1 அல்லது 2 முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட்டு வாருங்கள்.

காளான்

மனிதர்களை போன்றே, காளான்களுக்கும் வெயிலில் இருக்கும்போது வைட்டமின் டி சத்தை உருவாக்க கூடியது. மற்ற உணவுகளை காட்டிலும் இதில் வைட்டமின் டி அதிகமாக இருக்கிறது. எனவே, வாரத்தில் 2 முறையாவது காளானை சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *