ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் விஜய்க்கு துணை நிற்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் புது வேகம் எடுக்குதா என்ற கேள்வியோடு, விஜயின் குறி திமுகவா? அதிமுகவா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று அதிரடியாக 19 புதிய பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டார்.
அதன்படி, தழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளரா திரு. ஆதவ் அர்ஜுனா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
“ஆதவ் அர்ஜுனா விசிக கட்சிக்குள் வந்ததற்குப்பின்னும், வெளியேறியதற்குப் பின்னும் சதி இருக்கிறது” என திருமாவளவன் ஏற்கனவே கருத்து தெரிவித்தார். தற்போது, அவர் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், ஆதவ் தவெகவில் இணைவதால் விசிகவிற்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? ஏனெனில் விசிகவில் இருப்பவர்கள் தவெகவில் இணைவதற்கு சாத்தியமிருக்கிறதா?” என்ற கேள்விகளும் விவாதிக்கப்பட்டு வருகிறது. எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போன ஆதவ் அர்ஜுனா, தவெகவில் அடித்து ஆடும் நபராகவே இருப்பார். இதனால், ஆதவ் அர்ஜுனா தழக வெற்றி கழகத்திற்கு பலமாகவே பார்க்கப்படுகிறார்.
அதே போல், CT நிர்மல் குமார் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால், அதிமுகவின் ஐடி விங்கில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்காக மிகப்பெரிய அளவில் அரசியல் களத்தில் பங்காற்றியவர். தற்போது, CT நிர்மல் குமார் தவெகவில் இணைந்திருப்பது, அதிமுக ஓட்டுக்களை அள்ளிக்கொண்டு வரும் என்பது அரசியல் வியூகமாகவும் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நிர்மல் குமார் தவெகவில் இணைவது அதிமுகவிற்கு பின்னடைவாக இருக்காதா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. ஒருவேளை எதிர்காலத்தில் அதிமுக – தவெக கூட்டணிக்கு சாத்தியமிருக்கும் பட்சத்தில் அப்போது நிர்மல் குமார் என்ன செய்வார் என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது. CTR நிர்மல் குமார் நியமனம் தழக வெற்றி கழகத்திற்கு கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது.
பேச்சாளர் ராஜ்மோகன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படுகிறது. ராஜ்மோகனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இணையத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்ககூடியவர். ராஜ்மோகனும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்.
குறிப்பாக, தவெக அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி செயல்படுவார் என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், இவருடன் இணைந்தே ஆதவ் அர்ஜுனா செயல்படுவார் என்ற விளக்கத்தையும் விஜய் கொடுத்து உள்ளார்.
இப்படியாக, தவெகவில் ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்ட 19 பொறுப்பாளர்களை விஜய் இன்று நியமித்து உள்ளார். இவர்கள் அனைவரும் கழகப் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று, விஜய் அறித்து உள்ளார். விஜயின் இந்த புதிய நிர்வாகிகள் அறிவிப்பானது, தமிழக வெற்றிக் கழகம் புது வேகம் எடுக்க உந்துகோலாக இருக்கும் என்று, அரசியல் நோக்கர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.