‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத கலவரத்தை தூண்டும் அண்ணாமலை எச். ராஜா ஆகியோருக்கு நல்ல புத்தியை கொடுக்க வலியுறுத்தி’ நாகூர் தர்காவில் காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் பேசும் பொருளாக மாறி உள்ளது.
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் வீரவேல்”
என்ற சுலோகத்தை உச்சாரிக்காத முருக பக்தர்களே கிடையாது. ஆனால், அந்த முருக பெருமானை மையப்படுத்தி தமிழக அரசியலில் மத வெறியாட்டங்கள் சூறாவளியாக சூழன்று அடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த மத வெளியாட்டத்தில் சிக்கியவர்கள் சின்ன பின்னமாகிக்கொண்டு இருக்கிறார்கள்.
இங்க இருக்குகூடிய அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொள்கிறார்கள்.
அத்துடன், திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழகம் முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. ,வற்றுடன் இடது சாரி அமைப்புகள் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவில் ‘தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில நிர்வாகியான எச்.ராஜா ஆகியோருக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அண்ணாமலை மற்றும் எச். ராஜா ஆகியோர் புகைப்படங்களை வைத்து அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முஸ்லிம் இடையே பிரிவினவாதத்தை உண்டாக்கும் அண்ணாமலை மற்றும் எச்.ராஜா ஆகியோருக்கு நல்ல புத்தியை கொடுக்கவும், அவர்கள் ஆரோக்கியமான அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டும்’ என்றும், பிரார்த்தனையில் ஈடுபட்டதாக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி மாணிக்கவாசகம் தெரிவித்தார்.