‘தமிழ்நாட்டில் தமிழக அரசு ஏன் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை?” என்பதற்கு, திருமாவளவன் பதில் அளித்து உள்ளார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பை தவெக தலைவர் விஜய் கையில் எடுத்துள்ள நிலையில். “தமிழ்நாட்டில் தமிழக அரசு ஏன் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை?” என்ற கேள்வி பேசும் பொருளாக மாறி உள்ளது.
டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், “ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது ஒரு அவசியமானது தான். ஆனால், இந்திய ஒன்றிய அரசு தான் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலப்பாட்டை திமுக அரசு ஏற்கனவே முடிவு செய்திருக்கிறது” என்று, கூறினார்.
“இது தொடர்பான அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறது. அதற்கு காரணம், பிற மாநில அரசுகள் ஏற்கனவே எடுத்த புள்ளி விபரத்தை ஒரு சர்வே என்கிற அளவிலே தான் எடுத்துக் கொள்ள முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற அடிப்படையில் எடுத்து கொள்ள முடியாது என்று ஒரு கருத்து நிலவுகிறது இந்திய ஒன்றிய அரசு எவ்வாறு கருதுகிற நிலை உள்ளது எனவே இந்திய இந்திய ஒன்றிய அரசு ஜாதி வாரி அடிப்படையில் மக்கள் தொகையை கணக்கெடுத்து நடத்தினால், அது அதிகாரப்பூர்வமானதாக எல்லா மாநிலங்களுக்கும் உரிய ஆதாரபூர்வமாக அமையும்” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், “மாநில அளவில் சில முதலமைச்சர்கள் அந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதை சுட்டிக்காட்டி, விடுதலைச் சிறுத்தைகள் மாநில அரசு அந்த கணக்கெடுப்பு நடத்தலாம் என்ற கோரிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம் என்றும், அதை பரிசீலிக்க வேண்டும்” என்றும், தமிழக அரசுக்கு கோரிக்கை விடத்தார்.
அதன் தொடர்ச்சியாக, “தமிழக வெற்றி கழகத்தில் ஜாதி வாரியாக பொறுப்புகள் வழங்கப்படுகிறது” என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “அதற்கு விஜய் தான் பதில் அளிக்க வேண்டும்” என்றும், திருமாவளவன் கூறினார்.