தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்கள் வெயில் மற்றும் வெப்பத்தின் அளவு எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலையை பொறுத்த வரையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2°- 4° செல்சியஸ் என அதிகமாக பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்டிமீட்டரில் மழை எதுவும் பதிவாகவில்லை.
அதே போல், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலையை பொறுத்தவரையில் சமவெளிப் பகுதிகளான திருப்பத்தூரில் அதிகபட்ச வெப்பநிலை 36.7° செல்சியஸ் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக திருப்பத்தூர் மற்றும் கரூர் பரமத்தி பகுதிகளில் 16.0° செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது.
குறிப்பாக, அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையின் படி..
– 14-02-2025 மற்றும் 15-02-2025 ஆகிய தேதிகளில்: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
– 16-02-2025 : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
17-02-2025 முதல் 20-02-2025 ஆகிய தேதிகளில் : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதே போல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில்,
இன்று 14-02-2025 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று, கணிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், நாளை 15-02-2025 : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.