தவெக தலைவர் விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட விசயத்தில், பாஜக சொன்ன விளக்கம் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியிலும் கவனம் பெற்று உள்ளது.
திரைமறைவுக் கூட்டணியை வீழ்த்துவோம் என்று முதல்வர் சூளுரைத்த நிலையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு தந்து மத்திய அரசு அரசு உத்தரவிட்டிக்கிறது. இதில், அரசியல் பின்னணி இருக்கிறது என்று பலவேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.
இந்தநிலையில், நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாநில பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என உளவு பிரிவு தகவல் அளித்தன் பேரில் உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு அளித்து உள்ளதை தவிர, இதில் வேற எந்த அரசியல் ஒன்றும் இல்லை” என்று, கூறி உள்ளார்.
அத்துடன், “ஒவ்வொரு மனிதனையும் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது” என்றும், த.வெ.க தலைவர் விஜய் க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்தது குறித்து, அவர் விளக்கம் அளித்தார்.
அப்போது, “விஜய்வுடன் கூட்டணி அமைக்கப்படுமா?” என்று, செய்தியாளர்கள் கேள்வி கேட்க, “கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. ஆனால், கூட்டணிக்கு வரலாம்” என்றும், அவர் சூசகமாக பதில் அளித்தார்.
மேலும், “விஜய் க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்ததில் எந்த அரசியலும் இல்லை” என்றும, அவர் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் பாலியல் தொல்லை தினமும் பள்ளிகளில் நடக்கின்றது” என்று சுட்டிக்காட்டிய அவர் “பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார், 258 ஆசிரியர்கள் மீது புகார் வந்து உள்ளது என்பதையும்” அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், “காவல் துறையில் ஒரு மேல் அதிகாரியே பாலியல் புகாரில் சிக்கியுள்ளார் என்றும், விசாரணை நடத்தப்படும் என காவல்துறை கூறியுள்ளது. பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கினால் மட்டுமே, இங்கு குற்றங்கள் குறையும் என்றார்” என்றும், பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பேசினார்.