தவெக தலைவர் விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்..
தவெக தலைவர் விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதால், இதில் உள்ள அரசியல் லாப நஷ்ட கணக்கு என்ன? இதன் மூலம் யாருக்கு அரசியல் ரீதியான லாபம் இருக்கிறது என்ற கருத்து யுத்தம் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது.
இது புறம் என்றால், தமிழக அரசியல் களத்தில் ஆளுமைகளாக உள்ள அரசியல் தலைவர்கள் என்ன சொன்ன கருத்துக்களையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்..
திருமாவளவன், விசிக தலைவர்
“விஜயின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி இருந்தால், அதனை நான் வரவேற்கிறேன்” என்று, விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
“இது சோதனைக்காகவா? அங்கு யார் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காகவா? அந்த மீனை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதற்காகவா? என்பதை பொறுத்திந்திருந் தான் பார்க்க வேண்டும்” என்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.
அண்ணாமலை, பாஜக தமிழ்நாடு தலைவர்
“மற்ற அரசியல் கட்சியினருக்கு தருவதைப் போல தான் தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளதாக” பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
சீமான்
“விஜய்க்கு பாதுகாப்பு தேவைப்பட்டிருக்கும். கேட்டு வாங்கி இருப்பார். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை” என்று, சீமான் கருத்து தெரிவித்து உள்ளார்.
செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்,
“விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழக்கப்பட்டிருப்பது அரசியலாகவே நான் பார்க்கப்படுகிறது” என்று,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்து உள்ளார்.
வேல்முருகன்
“விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதில் அரசியல் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்” என்று,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசி உள்ளார்.
ரா. அர்ஜூனமூர்த்தி, பாஜக
“விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு விசயத்தில் அரசியல் கணக்கு துளியும் இல்லை” என்று, பாஜகவின் மூத்த தலைவர் ரா. அர்ஜூனமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
மதிமுக எம்.பி. துரை வைகோ
“விஜய்க்கு எதை வைத்து Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்? ஆளும் மத்திய அரசு தான் கொடுத்திருக்கிறது. எதை வைத்து கொடத்தார்கள் என்று தெரிவியில்லை” என்று, மதிமுக எம்.பி. துரை வைகோ கருத்து தெரிவித்து உள்ளார்.
பொன்ராஜ்
“விஜய்க்கு அச்சுறுத்தல் இருக்கா? விஜய்க்கு மட்டும் Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது எதற்கு?” என்று, பொன்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.