இரண்டாவது மாடியில் இருந்து நாய் ஒன்று தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தூக்கிவீசப்பட்ட நாயின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் வணிக வளாகத்தில், கடந்த 8 ஆம் தேதி அன்று அந்த வணிக வளாகத்தில் உள்ள 2 வது மாடிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த நாய் ஒன்று சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கு உள்ள ஊழியர்கள் நாயை தாக்கி, அங்கிருந்து தூக்கி கீழே வீசியதாகவும் , கூறப்படுகிறது. இது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்ற படுகாயம் அடைந்த நாயை மீட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவர், அந்த நாயை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தார். படுகாயம் அடைந்த நாயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதற்கு காலில் மட்டும் எலும்பு முறிவு எப்படி இருந்ததாக கூறினர். தொடர்ச்சியாக படுகாயம் அடைந்த அந்த நாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த நாய் மாடியில் இருந்து கீழே தூக்கிவீசப்பட்ட அதன் சி.சி.டி.வி கட்சியிகளும் தற்போது வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சில் பதைபதைப்பை ஏற்படுத்தி உளள்து.
ஒரு வாயில்லா ஜீவனை 2-வது மாடியில் இருந்து தூக்கி வீசி அந்த நாய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் வகையில் செயல் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்குதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்கள். இதனை அடுத்து, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.