“ரசிகர்கள் வேறு.. வாக்காளர்கள் வேறு என புரிந்துகொண்டேன்..” என்று, மநீம கட்சியினரின் தலைவர் கமல்ஹாசன் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு மநீம கட்சியினரின் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “என்னை தோற்றுப்போன அரசியல்வாதி என்கிறார்கள்; 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வரத் தவறினேன் என்பதால் தான், அந்த தோல்வி” என்று, அவர் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என புரிந்துகொண்டேன்” என்றும், கமல்ஹாசன் பேசினார்.
குறிப்பாக, “மநீம கட்சியினரின் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது, வரும் காலத்தில் தமிழக சட்டப் பேரவையில் ஒலிக்கப்போகிறது” என்றும், கமல்ஹாசன் சூளுரைத்தார்.
அத்துடன், இரு மொழி கொள்கைப் பற்றிய பேசிய அவர், “நம்மை இணைப்பது தமிழ் மொழி தான். நான் தன்னம்பிக்கையுடன் உயர்ந்திருப்பதற்கு காரணம், தமிழக மக்கள் தான் என்றும் அவர் புகாழராம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “எந்த மொழி வேண்டும் எந்த மொழி கற்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும்” என்றும், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்தார்.
இதனிடையே, மநீம கட்சியினரின் தலைவர் கமல்ஹாசன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.