சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட வந்த போது ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட இரு காவலாளிகளுக்கும் , ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக” சென்னை வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இந்த புகாரின் பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் நடிகை விஜயலட்சுமியிடம் 2 நாட்களுக்கு முன்பு சென்னை போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு குறித்த புதிய ஆதாரங்களை சேகரித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், சீமான் கைதாக வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் அடிப்பட்ட நிலையில், சீமானை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் ஆஜார் ஆகாத நிலையில், 2 வது சம்மனை சீமான் வீட்டிற்கு போலீசார் நேரில் கொண்டு சென்றனர். ஆனால், சீமான் வீட்டில் அந்த சம்மனை யாரும் வாங்க வில்லை என்றும் கூறப்பட்ட நிலையில், சம்மனை கொண்டுச் சென்ற போலீசார் அதனை சீமான் வீட்டின் கேட்டில் ஒட்டினர்.
இதனையடுத்து, போலீசார் ஒட்டிவிட்டுச் சென்ற அந்த சம்மனை, சீமான் வீட்டு காவளிகள் அதனை கிளித்து எரிந்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று, சமூகவளைத்தளத்தில் வைரலான நிலையில், இது குறித்து சீமான் வீட்டிற்கு நேரில் சென்ற போலீசார், சீமான் வீட்டிற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது, காவலில் இருந்த காவலாளி போலீசாரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், சீமான் வீட்டு காவலாளியை தாக்கிய போலீசார் அதிரடியாக 2 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது.
குறிப்பாக, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு மற்றும் போலீசாரை தாக்கியதாக ஒரு வழக்கு என இரண்டு வழக்குகள் தனித்தனியாக சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோர் மீது பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வீட்டுக் காவல் பணியில் இருந்த இருவர் மீது போட்ட வழக்கைக் கைவிட்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் மற்றும் இன்னும் சிலர் வலியுறுத்தி வந்தனர். இதனால், போலீசாரின் செயலுக்கு ஆதரவும் – எதிர்ப்பும் கிளம்பியது.
இதனையடுத்து சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில்தான், சீமான் வீட்டில் சம்மன் ஒட்ட வந்த போது ஏற்பட்ட தகராறில் கைது செய்யப்பட்ட இரு காவலாளிகளுக்கும் , ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.