கோயில் திருவிழாக்களில் அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதாவது, தமிழகத்தில் உள்ள கோவில்களில் இசை கச்சேரிகள் நடத்தப்படும் போது, பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என்று, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் கோவில் திருவிழாக்களின் போது, கோவில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது, சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “புதுவையில் உள்ள திருமலையராயன் பட்டினம் பகுதியில் உள்ள வீதி வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவின் போது, கோவில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நடத்தப்பட்டதாகவும், அதில் பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாகவும், கோவிலுக்கு அறங்காவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என்றும், அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து அறநிலையத் துறை தரப்பில், “கோவிலுக்குள் பக்தி பாடல்கள் மட்டுமே பாட அனுமதி உண்டு என்றும், அறங்காவலர் நியமனம் தொடர்பாகா அரசின் கருத்தை அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும்” விளக்கமளிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, “கோவிலுக்குள் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் பக்தி பாடல்களுக்கு மட்டுமே பாட அனுமதிக்க வேண்டும் என்றும், பக்தி பாடல்கள் தவிர்த்து சினிமா பாடல்களை பாட அனுமதிக்க கூடாது” என்றும், அதிரடியாக உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார். இதனால், கோயில் திருவிழாக்களில் இனிமேல் சினிமா பாடல்கள் படாப்பட மாட்டது என்ற சூழல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல், மதுரையில் பால் உற்பத்தியாளருக்கு நேரடியாக ஊக்கத் தொகை செலுத்தும் முறையை கிராம பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலமாக செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் வருகை தராத நிலையில் திட்டமிட்டபடி வரும் 11 ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்று, பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு அதிரியாக அறிவித்து உள்ளது. இதனால், பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.