“கஞ்சா, கடன், மது விற்பனை, பாலியலில் என இந்தியாவிலே தமிழ்நாடு நம்பர் ஒன்” என்று, அகில இந்திய செயலாளர் சிறுபான்மையினர் அணி இப்ராஹிம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் மும்மொழி கொள்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய செயலாளர் சிறுபான்மையினர் அணி இப்ராஹிம், மும்மொழி கொள்கை அவசியம் குறித்து எடுத்துரைத்து கடை மற்றும் வீடு பகுதிகளில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய இப்ராஹீம், “திமுக ஆட்சி எப்போது எல்லாம் நடக்கிறதோ அப்போது தோல்வியை மறைப்பது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து மத்திய அரசு மீதும், ஆளுநர் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்” என்று, பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அத்துடன், “இந்தியாவிலே தமிழகம் மட்டம் தான் தான் குடிப்பதில் நம்பர் ஒன், கடன் வாங்கிய வரிசையில் நம்பர் ஒன், கஞ்சா மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் நம்பர் ஒன். ஆனால், வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறி செல்லவில்லை” என்றும், அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.
“திமுக ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்கு திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முயற்சி செய்து வருகிறார்” என்றும், அவர் தனது குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் உடன் இருந்தனர்.
இதனிடையே, “கஞ்சா, கடன், மது விற்பனை, பாலியலில் என இந்தியாவிலே தமிழ்நாடு நம்பர் ஒன்” என்று, அகில இந்திய செயலாளர் சிறுபான்மையினர் அணி இப்ராஹிம் பேசியது, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.