“ஒறு கூரையின் கீழ் அனைத்து காட்சி தலைவர்களையும் அமர வைத்தவர் தான் முதல்வர், வேறு யாரேனும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடியுமா?” என்று, கவிப்பேரரசு வைரமுத்து, தமிழக அரசை பாராட்டி பேசி உள்ளார்.
சென்னை பாரிமுனையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2025 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மேயர் பிரியா மற்றும் நீதியரசர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “நீதியரசர்கள் தனது மனைவிகளிடம் கூட தனது ரகசியங்களை சொல்லாதவர்கள். நீதியரசர்கள், சொற்களை தண்ணிர் போல செலவழிக்க முடியாது. நீதிபதிகள் தற்போது ஒரு சுகந்தர பறவைகள், எது வேண்டும் பேசலாம்.
சொல் என்பது பித்தலை. செயல் என்பது ஒரு தங்கம். அமைச்சர் சேகர் பாபுவை அவருடைய செயல்பாடுகள் நிலை நிறுத்த வைக்கிறது” என்று, புகழாராம் சூட்டினார்.
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய துணை கண்டத்தின் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று, அமைச்சர் சேகர்பாபு உழைத்து கொண்டே இருக்கிறார் என்றும் கருப்பு தமிழ்ர்களை உலகத்திற்கு அடையாளம் காட்ட தூக்கம் வேண்டாம் என்று நினைத்தவர்கள் தான் மூன்று முதல்வர்கள், அண்ணா, காமராஜர், ஸ்டாலின், இவர்கள் மூன்று பேரும் செயல் வீரர்கள்” என்றும், அவர் புகழாராம் சூட்டினார்.
“நான் ஒரு நாள் கலைஞரிடம் பொது மக்கள் உங்களிடம் கொடுக்கும் மனுக்களை எத்தனை நிறை வேற்றுவீர்கள் என்று கேள்வி கேட்டேன். அதற்கு அவர் 30 விழுக்காடு நிறைவேற்றுவேன் என்று கூறினார். பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் பெரும்பாலும் அடுத்த முதல்வர் ஆகுவது எப்படி? என்னுடைய மனைவி பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என பல்வேறு மனுக்கள் கிடைக்கும்.
தற்போதைய முதல்வரை பார்த்தால், முடிந்த அளவிற்கு உதவி செய்கிறார். எல்லா மனுக்களையும் நிறைவேற்ற முடியாது. முறையான மனுக்களுக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றும், அவர் கூறினார்.
குறிப்பாக, “ஒறு கூரையின் கீழ் 58 காட்சி தலைவர்களை அமர வைத்தவர்தான் முதல்வர். வேறு யாரேனும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடியுமா?” என்றும், கேள்வி எழுப்பிய கவிப்பேரரசு வைரமுத்து, தமிழக அரசை பாராட்டி புகழாராம் சூட்டினார்.