Mon. Jun 30th, 2025

“என்னடா நடக்குது..” கழற்றிவிட்ட காதலி.. பரிசாகா அளித்த செல்போனை திரும்பி வாங்கிச் சென்ற காதலன்! புதிய காதலனுடன் சென்று அடித்து உதைத்து செல்போனை மீண்டும் பறித்து சென்ற காதலி!

காதலி வேறொருவருடன் பழகியதால் பரிசுகா அளித்த செல்போனை காதலன் திரும்பி வாங்கிச் சென்ற நிலையில், புதிய காதலனுடன் சென்று பழைய காதலனை அடித்து உதைத்து செல்போனை மீண்டும் பறித்து சென்ற காதலியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை மேற்கு மாம்பலம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சரவணன். கல்லூரி மாணவரான இவர், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலித்த அந்த மாணவிக்கு காதலன் சரவணன், செல்போன் ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன், அந்த செல்போன் எண்ணிற்கு அந்த காதலன் சரவணன், மாதாமாதம் இஎம்ஐ-யும் செலுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், அந்த பெண் வேறொருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்ததும் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த காதலன் சரவணன், “தான் வாங்கி கொடுத்த செல்போனை திருப்பித் தரும்படியும், 3 மாதமாக இஎம்ஐ கட்டவில்லை என்பதால், உடனே செல்பேனை தரும்படி கல்லூரி மாணவியான காதலியிடம் கேட்டு செல்போனை காதலியிடம் இருந்து வாங்கிவிட்டு, வீட்டிற்கு சென்று உள்ளார்.

அதாவது, பல்லாவரத்தில் உள்ள அந்த மாணவி வீட்டிற்கு சென்று செல்போனை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து, அந்த மாணவி தற்போது தான் புதிதாக காதலித்து வரும் காதலன் அருணிடம், அந்த மாணவி நடந்த விசயத்தை கூறியிருக்கிறார்.

உடனே, அந்த கல்லூரி மாணவி, காதலன் அருண், அவரது நண்பர்கள் ஆதி என்ற ஆதித்யன் உள்பட 5 பேர், மேற்கு மாம்பலத்தில் உள்ள சரவணன் வீட்டிற்கு சென்றனர். பிறகு, சரவணனை கருணாநிதி தெருவிற்கு வரவைத்து செல்போனை தரும்படி கேட்டு கல்லூரி மாணவி தகராறில் ஈடுபட்டார். அவர் செல்போனை தர மறுத்ததால் சரவணனை அடித்து உதைத்து விட்டு செல்போனை காதலி எடுத்து சென்றார்.

இதில் காயமடைந்த சரவணன், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 6 தையல் போடப்பட்டது. அவர் தாக்குதல் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது காதலி, அருண் உள்பட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பழையை காதலியையும், அந்த காதலியின் புதிய காதலனையும் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே நேரத்தில், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *