விஜய் குறித்த கேள்விக்கு, “அய்யய்யோ, அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்” என்று, அமைச்சர் துரைமுருகன் சற்றே பதறிப்போனார்.
தலைகீழாக நின்றாலும் மேகதாது அணையை கட்ட முடியாது – வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பதறிப்போனது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்து உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு, 817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 88.27 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினர்.
இந்த விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “பெண்கள் வளர்ச்சிக்காக சுய நிதி வேண்டும் என மகளிர் குழுக்களை அமைத்தோம். ஒரு காலத்தில் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, நன்றாக இருந்த குழுக்கள் 10 ஆண்டுகளில் நசிந்து போனது” என்று, வேதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “அதனை நன்றாக்கும் வகையில் முதல்வர் சென்னையில் அப்பணியை துவங்கினார். இங்கு நானும் கடன் தவிகளை வழங்கினேன்” என்று, கூறினார்
“நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகனிடம், 2026-ல் திமுகவை அகற்றுவோம் என்று விஜய் பேசியுள்ளாரே” என்று, செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு உடனடியாக, “அய்யய்யோ.. அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்” என்று, கூறியபடியே சற்றே பதறிப்போனார்.
அப்போது, “மேகதாது அணை குறித்து பேசி அமைச்சர்கள் துரைமுருகன், “தமிழ்நாடு அனுமதிக்காமல் தலைகீழாக நின்றாலும், மேகதாது அணையை அவர்களால் கட்ட முடியாது” என்றும், அமைச்சர் துரைமுருகன் உறுதிப்படத் தெரிவித்தார்.