தவெக தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பு என்னாச்சு? என்ற கேள்வி தொடர்ச்சியாக கேட்கப்பட்டுக்கொண்டே வந்த நிலையில், அதற்கான பதில் தற்போது கிடைத்து உள்ளது.
“திரைமறைவுக் கூட்டணியை வீழ்த்துவோம்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்த நிலையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு தந்து மத்திய அரசு அரசு உத்தரவிட்டிக்கிறது. இதில், அரசியல் பின்னணி இருக்கிறது என்று பலவேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.
அதாவது, தவெக தலைவர் விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதால், இதில் உள்ள அரசியல் லாப நஷ்ட கணக்கு என்ன? இதன் மூலம் யாருக்கு அரசியல் ரீதியான லாபம் இருக்கிறது என்ற கருத்து யுத்தம் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் நடந்தது.
இதனையடுத்து, பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என உளவு பிரிவு தகவல் அளித்தன் பேரில் உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு அளித்து உள்ளதை தவிர, இதில் வேற எந்த அரசியல் ஒன்றும் இல்லை” என்று, கூறி விளக்கம் அளித்தார்.
மேலும், “விஜய் க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்ததில் எந்த அரசியலும் இல்லை” என்றும, அவர் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, வரும் 14 ஆம் தேதி முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, வருகின்ற 14 ஆம் தேதி விஜய் Y பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளுடன், ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்து இருந்தாலும், தற்போது வரை Y பிரிவு பாதுகாப்பு என்பது விஜய்க்கு வழங்கப்படாமல் இருந்தது இந்த நிலையில், வரும் 14 ஆம் தேதி முதல் இந்த பாதுகாப்பு அமலுக்கு வர உள்ளது என்றும், தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.