பி எம் ஸ்ரீ ஸ்கூல் திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவிக்கின்ற கடிதத்தில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கடந்த ஆண்டு 15 ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மத்திய கல்வி செயலாளர் சஞ்சய் குமார் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் ஆர்வமுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பி.எம். ஸ்ரீ ஸ்கூல் திட்டத்தில் தமிழகம் இணைவது தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் பள்ளிக் கல்வி செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பி.எம். ஸ்ரீ ஸ்கூல் திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்த பின்னர் 2024-2025 ஆம் கல்வியாண்டு துவங்குவதற்கு முன் முடிவு எடுக்கப்படும்.
எனவே, சமக்கிர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் 3 வது மற்றும் 4 வது தவணை நிதியை விடுவிக்க வேண்டும் ” என்றும், சிவதாஸ் மீனா அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இதனிடையே, இந்த கடிதம் குறித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொதுவெளியில் பேசியிருந்தார்.
அதே போல், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களும், இந்த கடிதம் தொடர்பான செய்தியை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு, தமிழக அரசின் நிலையாக இருந்ததை உறுதி செய்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.