வனத் துறையினர் சிறுத்தையை பிடிக்கும் போது தாக்குவது போல் வெளிவந்த வீடியோ சமூக வலைதளங்களில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம், ஓணாம்பாளையம், மருதமலை பகுதிகளில் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்தது. அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடுகளை வேட்டையாடி கொன்றது. இந்த நிலையில் வனத் துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு பூச்சியூர் கலிங்க நாயக்கன்பாளையம் பகுதியில் சிறுத்தை இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது சிறுத்தை பிடிப்பதற்காக அங்கு சென்ற போது வனத் துறையினர் சிறுத்தையை தாக்குவது போல வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வலை வைத்து சிறுத்தையை பிடிக்கும் போது இரண்டு பேரை சிறுத்தை தாக்கியதில் ஆத்திரம் அடைந்த நபர்கள் சிறுத்தையை மீண்டும் தாக்கியதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி இருந்த நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் வன விலங்குகளை பிடித்து இடமாற்றம் செய்யும் போது, இது போல வனவிலங்குகள் உயிரிழந்து வரும் சம்பவங்களும், அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்க.