“சங்கராந்திகி வாஸ்துனம்” தெலுங்கில் ஒரு “மதகஜராஜா!”
தெலுங்கில் 300 கோடி வசூல் செய்த பேமிலி எண்டர்டெய்னர். அப்படி என்ன தான் இருக்கிறது என்று “சங்கராந்திகி வாஸ்துனம்” படம் பார்க்க ஆரம்பித்தேன். படம் மைண்ட்லெஸ் காமெடி ஜானர்.
படத்தில் இப்படிலாம் நடக்குமா? லாஜிக்கே இல்லையே? இதெல்லாம் நம்பறா மாதிரியா சார் இருக்கு? வகையறாவாக நீங்கள் இருந்தால் இந்தப் படம் உங்களுக்கானதல்ல. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். பெரும்பாலான காட்சிகள் மொக்கையாக இருந்தாலும், சிலது நம்மை சிரிக்க வைக்கிறது. சிலது புன்முறுவலோடு கடக்க வைக்கிறது.
ஜாலியான காமெடிப் படத்தில் ஹீரோவாக நடித்ததற்கே வெங்கடேஷை பாராட்ட வேண்டும். அவரது ரியாக்ஷன்கள் அல்டிமேட். அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ். காதலியாக மீனாக்ஷி சவுத்ரி. இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயின், அவர்கள் குடும்பம், போலீஸ் டீம், வில்லன் டீம் வரை அனைவருமே அரைலூசாகத் தான் காட்டியிருக்கிறார்கள். அதற்காக ஒரு முதல்வரையும் அப்படியே காட்டியிருப்பதெல்லாம் ஓவர்.
தெலுங்குப் படம் என்பதால் தப்பித்தார்கள். நடிகர் வெங்கடேஷின் காதல் கதையை பாட்டில் சொல்வது, அந்தப் பாடலுக்கு ஐஸ்வர்யாவுடன் நடனம் ஆடுவது, க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் வெங்கடேஷுக்கு கோபம் வருவது என சின்ன சின்ன ஐடியாக்களில் ஈர்க்கிறார்.
இயக்குனர் அணில் ரவிபுடி, ஜெயிலராக வரும் உபேந்திரா + சாய்குமார் எபிசோட் உண்மையாகவே நன்றாக இருக்கிறது. சாய்குமாரின் குரலை கிண்டல் செய்து அதை மாஸாக பயன்படுத்தியது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
மீண்டும் சொல்கிறேன். படத்தில் லாஜிக் என்பதெல்லாம் மருந்துக்கு கூட இல்லை. மூளையை கழட்டி வைத்து விட்டு ரசிக்கலாம்.
“சங்கராந்திகி வாஸ்துனம்” படம் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் தெலுங்கில் ஒரு “மதகஜராஜா!”
– Mahadevan CM