“இந்தியை வளர்ப்பதைவிட இந்தியாவை வளருங்கள் என்று பாஜகவிற்கு அறிவுரை கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருப்பாச்சூர் பகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று. இதில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்”.
” நிகழ்ச்சி தொடங்கிய உடன் தமிழகத்தின் உரிமைகளை யாருக்கும் விட்டு தர மாட்டோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் பேசிய அவர், இப்படி தோற்கின் எப்படை வெல்லும் என ஒன்றிய ஆட்சியாளர்களை கேட்பதாகவும், தமிழக உரிமைகளுக்காக வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் எனவும் தெரிவித்தார். மொழியின் நிலத்தை கெடுப்பது யாராக இருந்தாலும் துணிவுடன் எதிர்ப்பவர்களே எனவும், 3 ஆண்டுகளில் தமிழகம் முன்னேறி உள்ளது. எனவும், 10 ஆண்டுகள் ஆட்சி வளைந்த முதுகோடு டெல்லியில் அடகு வைத்த ஆட்சி அதிமுக எனவும், திமுக ஆட்சி அமைந்தால் தான் சுயமரியாதையுடன் வாழ முடியும் என 2021-இல் திராவிட மாடல் ஆட்சியை மக்கள் உருவாக்கினார்கள்.மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி வருகிறோம் எனவும், திமுக அரசு மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டார்.
மாண்புமிகு மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்போது, குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, 10 ஆண்டுகளாக சொன்னதை செய்யவில்லை. மாநில உரிமைகளை சிதைக்கும் நடவடிக்கையில் பிரதமர் ஈடுபடுகிறார் எனவும், மாநில அரசுகள் டெல்லிக்கு காவடி தூக்கும் நிலையை மாற்றுவேன் எனவும் கூறினீர்களே அதன்படி நடந்து கொண்டீர்களா என மோடிக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக அரசு திட்டங்களை செயல்படுத்துவதில்லை எனவும்,பிரச்சினை வரும் போது மாநில முதல்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும், எந்த வகையிலும் மாநில அரசுகள் பழிவாங்கப்படாது என பிரதமர் கூறினார், எதிர்கட்சிகளை பழிவாங்கும் அரசியல் நடத்துகிறீர்கள் எனவும், 2101 கோடி நிதி கொடுக்காமல் பழிவாங்கும் அரசியலை நடத்துகிறீர்கள் பிரதமரே தமிழகம் பிச்சைக்கார மாநிலமா எனவும், நிதி கொடுக்காமல் மிரட்டுவது நியாயமா? எனவும் அவர் பேசினார். மக்களுக்கான திட்டமானால் வரவேற்போமே, ஆனால் தேசிய கல்வி கொள்கை அப்படிப்பட்டதா எனவும், தேசிய கல்வி கொள்கை, காவி கொள்கை, இந்தியை கொண்டு வரும் கொள்கை என விமர்சித்தார்.
3 மற்றும் 5 வகுப்புகளுக் பொது தேர்வு வைக்க பார்க்கின்றனர் எனவும், கலை கல்லூரிக்கும் நீட் போன்று நுழைவு தேர்வு வைத்து தான் எடுப்பர் எனவும், குலதொழில் போன்று குலக்கல்வி கொண்டு வர பார்க்கின்றனர் எனவும், 10000 கோடி கொடுத்தாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்திற்கு நாகரிகம் தெரியாதா எனவும், தமிழகத்தை கொச்சைப்படுத்துவது உங்கள் வழக்கம்; ஜெகநாத கோயிலின் கருவூல சாவிக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்மந்தம் எனவும், அநாகரீகம் பேசும் தர்மேந்திர பிரதான் எது நாகரீகம்? குஜராத்தில் இயற்கை பேரிடர் வந்தால் நிதி கொடுப்பதும், தமிழகத்திற்கு வந்தால் நிதி கொடுக்காதது தான் நாகரீகமா?
அநாகரீகத்தின் அடையாளமே நீங்கள் தான் எனவும், தொகுதி மறுசீரமைப்பு என்ற கத்தி தென்னிந்தியாவின் மீது தொங்கி கொண்டிருக்கிறது எனவும், தமிழகம் 8 மக்களவை தொகுதிகளை இழந்து 39 என்பது 31 ஆக மாறும் எனவும், பாஜக, ஓரிரு உதிரி கட்சிகள் நீங்களாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தினோம்; தென் மாநிலங்களில் பெற முடியாத வெற்றியை வட மாநிலங்களில் வைத்து கொள்ள பார்க்கும் சதியை திமுக தடுக்கும் எனவும், ஆந்திரா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மாநில முதல்வர்களுடன் தொலைபேசி வருகிறேன் எனவும்மார்ச் 22-ஆம் தேதி கூட்டம் நடத்த உள்ளோம் எனவும், எதேச்ச அதிகாரம் நடத்தி வருகிறது பாஜக எனவும், எப்போ தடுக்கலன்னா எப்பவுமே தடுக்க முடியாது தமிழ்நாடு வெல்லும் என்ற போராட்டம் இந்தியா முழுவதும் தொடரும் பிரதமர் அவர்களே இந்தியை வளர்ப்பதை விட இந்தியாவை வளருங்கள் எனவும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு சரிந்து கொண்டிருக்கிறது எனவும், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைத்தது அவமானம் எனவும் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட கை செய்ய மாட்டார்கள் என கூறினீர்களே 10 ஆண்டுகளில் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; கடந்த ஆண்டு 530 பேர் கைது செய்யப்பட்டனர்; இந்தாண்டு 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்ன நாடான இலங்கை கூட உங்களை மதிக்கவில்லை எனவும் பிரதமர் மோடி குறித்து பேசினார்”. இவ்வாறு முதல்வர் அவர்கள் கூறியது தமிழக வட்டாரத்தில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.