TNBudget2025: சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் என்னென் இடம் பெற்று உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: 2025-26
2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் என்ன?
பள்ளிகளுக்கு முக்கியத்துவம்! தமிழ் நூல்களுக்கு முக்கியத்துவம்!
– 500 தமிழ் நூல்களை மொழிபெயர்க்க முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
– ரூ. 2 கோடியில் சிங்கப்பூர், துபாய், கோலாலம்பூரில் தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்த திட்டம்.
– ரூ.7 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி, அறிவியல் ஆய்வுகளுக்கு அருங்காட்சியகம்
– 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வுக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு
– “ரூ.2,000 கோடி ரூபாய் நிதியினை இழந்தாலும் இருமொழி கொள்கையினை விட்டு தர மாட்டோம்” மத்திய அரசு விடுவிக்க வேண்டிய நிதியை தமிழ்நாடு அரசே ஏற்று இதன் காரணமாக மாநில அரசு தனது சொந்த ஆதார நிதியிலிருந்து ரூ.2,156 கோடியை விடுவித்துள்ளது.
– 10 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். அதன்படி, ன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் அமைக்க திட்டம்.
– தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில், செயற்கை நுண்ணறிவு (AI) இணையப் பாதுகாப்பு (Cyber Security) உள்ளிட்ட துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்.
– காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு. நகர்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பு வரையிலான 3.14 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.
– 1721 முதுநிலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமனம். ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும்.
– வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம். ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு.
– பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை, மாதம் தோறும் ரூ. 2000 வழங்கப்படும்..
– 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
– கல்லூரி மாணவர்களுக்கு கணினி வழங்கும் திட்டம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.
– தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களைப் போல உயர்கல்வி செல்லும் மாற்றுப்பாலின மாணவர்களுக்கும் மாதம் ரூ 1,000 வழங்கப்படும்.
– கருப்பை வாய் புற்றுநோய் தடுப்புக்கு நிதி!
– உலக தமிழ் ஒலிம்பியாட் To தொல்லியல் அகழாய்வுகள் திட்டம்.
– அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டம்.
– நொய்யல் அருங்காட்சியகத்துக்கு நிதி.
– தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி.