TNBudget2025:சென்னைக்கான திட்டங்கள் என்னென்ன?
TNBudget2025:சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ள சென்னை மாநகருக்கான திட்டங்கள் என்னென்ன முக்கிய அறிவிப்புகளாக இடம் பெற்று உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் என்ன?
சென்னைக்கான திட்டங்கள்
– சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு
– ரூ.88 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)
– ரூ.77 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் 10 இடங்களில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும்
– ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர் சென்னை, தாம்பரத்தில் முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்
– வேளச்சேரியில் புதிய பாலம். ரூ.310 கோடி ஒதுக்கீடு.
– ரூ.10 கோடி மதிப்பீட்டில்
25 இடங்களில் அன்புச்சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையம் அமைக்கப்படும்
– சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடியில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய விடுதிகள் அறிவிப்பு
– 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம்.
– சிட்கோ புதிய தொழிற்பேட்டைகள் 17,500 வேலைவாய்ப்புகள் ரூ.366 கோடி ஒதுக்கீடு.
– சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.
– பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்.
– தமிழ்நாட்டில் 1,125 புதிய மின் பேருந்துகள் அறிமுகம்.
– ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் திருவான்மியூர் – உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்க திட்டம்.
– அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண்செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயலாக்கம் என அறிவிப்பு.
– பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில் சேவை.
– மூத்த குடிமக்களுக்காக ‘அன்புச்சோலை’ திட்டம்.
– 17,500 வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.
– கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம்.
– கிளாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், பட்டாபிராம் வரை சென்னை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம்.
– 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா.
– கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக பேருந்து முனையம் அமைக்கப்படும்.
– டிசம்பவர் முதல் பூந்தமல்லி – போரூர் மெட்ரோவில் செல்லலாம் என அறிவிப்பு.
– ஊர்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்.
– கட்டுமான தொழிலாளர்களுக்கு உடல் பரிசோதனைக்கான அட்டை.
– ரூ.83 கோடியில் குழந்தை மையங்கள்.
– சென்னையில் சீராக குடிநீரை விநியோகிக்க ரூ.2,423 கோடி ஒதுக்கீடு.
– 6,100 கி.மீ. நீள சாலைகள் அமைக்க ரூ.2,200 கோடி நிதி ஒதுக்கீடு.
– தாம்பரத்தில் திடக்கழிவு மின்சாரம் தயாரிக்கும் ஆலை.
– சென்னையில் மேலும் 2 மேம்பாலங்கள் அமைக்கப்படும்.