TNBudget2025:சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ள மகளிருக்கான திட்டங்கள் மற்றும் விளையாட்டு துறைக்கான திட்டங்கள் என்னென்ன முக்கிய அறிவிப்புகளாக இடம் பெற்று உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் என்ன?
மகளிருக்கான திட்டங்கள்:
– புதுமைப் பெண் திட்டத்திற்கு ரூ. 420 கோடி ஒதுக்கீடு
– மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு ரூ. 3,600 கோடி நிதி ஒதுக்கீடு
– புதிதாக 10,000 மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கத் திட்டம். சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும்; 37 ஆயிரம் கோடியில் கடனும் வழங்கப்படும்
– மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.13, 807 கோடி நிதி ஒதுக்கீடு.
– ரூ.75 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புரப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யப் புதிய திட்டம் அறிமுகம்.
– ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு.
– 1 லட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம்.
விளையாட்டு:
பள்ளிக்கல்வியில் செஸ் விளையாட்டு போட்டிகள்.
– ஆண்டுதோறும் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும், பரிசுக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு
– ரூ.572 கோடி விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கீடு
– – உலக தமிழ் ஒலிம்பியாட் திட்டம்.
தமிழக சட்டமன்றத்தில் கிட்டத்தட்ட 2.33 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்து நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
இதனிடையே, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப் பேரவை கூடிய நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிமிடத்தில், அதிமுகவினர் குறுக்கீடு செய்தனர். அத்துடன், பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் பட்ஜெட் உரை வாசித்துக்கொண்டிருக்கும் போதே அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.