“கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டியில் தனது 3 மகன்களை கடத்த முயன்றதாக” தாய் அளித்த புகாரின் பேரில், பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரத்தினகிரி – கார்த்திகை செல்வி தம்பதியினர். இந்த தம்பதிககளுக்கு பிரியங்கா 27, பிரியதர்ஷினி 25, பிரித்திகா 23 என்ற 3 மகள்கள் உள்ளனர்.
இதில், மூத்த மகள் பிரியங்கா கொல்லிமலை வன சரக்கத்தில் வனகராக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு “முன்பு வேலை வேண்டாம்” என்று, எழுதிக் கொடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், ‘i natruralist வெப்சைட்’ மூலமாக பெங்களூரைச் சேர்ந்த 41 வயதான கார்த்திக், என்பவரின் ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 11 ஆம் தேதி கார்த்தி மற்றும் அவரது மனைவி 39 வயதான கிரிஷ்மா, உடன் BMW காரில் வீட்டிற்கு நேரடியாக வந்து 3 மகள்களையும் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
இதற்கு, கார்த்திகை செல்வியும் அவரது கணவர் ரத்தின கிரியும் தனது தங்களது மகள்களை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அப்போது அவர்கள், “உங்கள் மகள்கள் எங்களுடன் வர ஒத்துழைக்கிறார்கள். நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?” என்று கூறி, தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.
அத்துடன், கார்த்திக்கை விசாரிக்கையில் “அவர் பெங்களூரில் உள்ள ஒகானா பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருவதாகவும்” தெரிவித்து உள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள், அப்பள்ளியை தொடர்பு கொண்டு கேட்ட போது, அங்கு “கார்த்திக் என்பவர் தங்களது பள்ளியில் வேலை செய்யவில்லை” என்று கூறவே, சந்தேகம் ஏற்பட்டு அவர்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து, குளித்தலை காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்துள்ளனர்.
அத்துடன், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது 3 பெண்களை கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து அவர்களது பி.எம்.டபிள்யூ. காரினையும் பறிமுதல் செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர், சிறையில் அடைத்தனர்.
மேலும், பெங்களூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கடத்த முயற்சி செய்யப்பட்ட மூன்று பெண்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.