TNBudget2025: வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 5 வது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டமனத்தில் தாக்கல் செய்தார். அப்போது, வேளாண் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2 ஆம் இடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கினார். அதன்படி,
– 2025-26 நிதியாண்டில் தமிழ்நாடு வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு
– டெல்டாவில் நெல் சேமிப்பு வளாகங்கள்!
– வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவ புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு
– கால்நடை பராமரிப்பு திட்டம்
– வண்ணமீன் வளர்ப்பு திட்டம்
– உழவர் சந்தை மேம்படுத்துதல் திட்டம்
– வெள்ளாடு / செம்மறி ஆடு வாங்கும் திட்டம்
– மல்லிகை, ரோஜா சாகுபடியை அதிகரிக்கும் திட்டம்
– ஊரகப்பகுதியில் உள்ள ஏழை மகளிருக்கு நாட்டுக் கோழிப் பண்ணகைள் அமைக்க ரூ.8 கோடி நிதி உதவி.
– தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை திட்டம்
– நிலமற்ற விவசாயிகளின் நலனுக்கான திட்டம்
– விவசசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கும் திட்டம்
– வேளாண் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போருக்கு விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது.
– சீமை கருவேலத்துக்கு பதில் மிளகாய் சாகுபடி.
– வேளாண் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்.
– பனை முதல் பலா வரை… கவனம் ஈர்க்கும் திட்டங்கள் பல உள்ளன.
– தூர்வாரும் பணிகளுக்கு நிதி.
– விவசாயிகளுக்கு வேளாண் இயந்திர திட்டங்கள்.
– விவசாயிகளுக்கு வேளாண் இயந்திர திட்டங்கள்
அதாவது, 100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தித் திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
– மானிய விலையில் சோலார் பம்ப் செட்டுகள்
– கரும்பு உற்பத்தி திட்டம்.
– 7 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்
– இயற்கை சீற்ற இழப்புக்கு ரூ.841 கோடியில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்.
– உயிர்ம விவசாயிகளுக்காக ஊக்கத்தொகை, உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதகைளை கட்டத்திற்கு உழவர்களுக்கு முழு வானியம் அறிவிப்பு.
– விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்திற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு.
– உழவர் நல சேவை மையம் அமைப்பு.
– 1000 உழவர் நல சேவை மையங்கள் அறிவிப்பு.
– எள் முதல் மக்காச்சோளம் வரை மேம்பாட்டுத் திட்டம் அறிவிப்பு.
– விவசாயிகளுக்கு 4 ஆண்டுகளில் ரூ.1,631 கோடி நிவாரணம்.