Mon. Jun 30th, 2025

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. ஆனால், பாலியல் குற்றங்கள்..” வேல்முருகன் சொல்ல வருவது என்ன?

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. ஆனால், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்” என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியல் வேகமாக வளர்த்து வருகிறது” என்று, குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய வேல்முருகன், “நம்மை திசை திருப்ப சங்கி கூட்டம் காத்துக்கொண்டு உள்ளது என்றும், 234 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும்” என்றும், தெரிவித்தார்.

அப்போது, “இந்தியாவின் சிறந்த பிரதமாக மோடி திகழ்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளது” குறித்தான கேள்விக்கு பதில் அளித்து பேசிய வேல்முருகன், “அதிமுக என்பது மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கம். இன்று பல்வேறு குழுவாக இயங்கி வருகிறது. சிறந்த ஆளுமையாக உள்ள கட்சிகளை பாஜக கட்சி வருமான வரித்துறை மற்றும் அமலக்கத்துறை வைத்து இணைய முயற்சி செய்கிறது. மோடியை செங்கோட்டையன் பாராட்டுவதை வைத்து மட்டும், எதுவும் சொல்லி விட முடியாது” என்று, பேசினார்.

“தமிழத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது?” என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய வேல்முருகன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது என்ற அளவில் இல்லை. பாலியல் ரீதியான தொல்லைகளை கட்டுபடுத்த வேண்டும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

அப்போது, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது என கூறும் நீங்கள், பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது எனவும் கூறுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு, என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய வேல்முருகன், “7 கோடி மக்கள் வாழும் பகுதியில் அங்கங்கே பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்திய முழுவதும் அதிகமாக பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது ஆபாச படங்கள் வருகிறது. அதனால், இளைஞர்கள் போதை கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்” என்றும், வேல்முருகன் வேதனைத் தெரிவித்தார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *