Tue. Jul 1st, 2025

“சங்கி பரிவார் ஆட்சி, இந்த தேசத்தை ஆளுகிறது!” – வேல்முருகன் காட்டம்..

By Joe Mar16,2025 #BJP #central government #State

“டாஸ்மாக்கில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, தவறு இழைத்தவர்கள் மீது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்” என்று, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வலியுறுத்தி உள்ளார்.

சென்னை தி.நகரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் “டாஸ்மாக் மதுபானத்தில் 1000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது என்று, அதிமுக – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூறுகிறதே?” என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு பத்து ரூபாய், இருபது ரூபாய் கூடுதலாக வாங்குவது என்பது பத்திரிகைகள் மற்றும் தங்கள் கட்சிகள் நேரடியான கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான முறைகேட்டில் ஆயிரம் கோடியா 5000 கோடியா, பத்தாயிரம் கோடியா என்பதை நேர்மையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு டாஸ்மாக்கள் நடைபெறக்கூடிய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, தவறு இழைத்தவர்கள் மீது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்” என்று, தெரிவித்தார்.

அப்போது, “கோகுல் ராஜ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த குற்றவாளி பரோலில் வெளிவந்த வரை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனரே?” என்ற

கேள்விக்கு பதில் அளித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “சாதி ரீதியாக நடைபெறக்கூடிய பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்து திருத்துவதற்கு உரிமை இருந்தது. ஆனால், அம்மையர் ஜெயலலிதா ஆட்சியில் அதை தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் விளைவு வகுப்பறையில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை முறைபடுத்தும் நிலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பள்ளிகளில் அந்த நிலை இல்லை. அது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். ஆசிரியர்கள் கையில் பிரம்பு இருந்தால், மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஒழுங்கு படுத்துவதற்கு என்ற அளவில் இருக்கும்.

பள்ளி மாணவர்களே போதைக்கு அடிமையாகி வகுப்பறையில் ஆசிரியர்கள் கத்தியால் குத்துகிறார்கள். சாதி சங்க தலைவர்கள் அழைத்து வந்து மிரட்டுகிறார்கள், பள்ளி வகுப்பறையில் சாதி பெயரை எழுதுகிறார்கள். தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அந்த பெயரை அழித்து இருக்கிறார்கள்” என்றும், அவர் காட்டமாக பேசினார்.

மேலும், “உத்தரப் பிரதேசத்தில் மதத்தின் பெயரால் பள்ளிவாசல் மீதும், மசூதிகள் மீது கோலி பண்டிகை போது காவல் துறை பாதுகாப்போடு இஸ்லாமியர்கள் மீது வண்ணப் பொடிகளை தூவி உள்ளனர். அதற்கு உடன்படாத நபரை கொலை செய்து உள்ளனர். ஒரு சங்கி பரிவார் ஆட்சி, இந்த தேசத்தை ஆளுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார். தெரிவித்தார்.

குறிப்பாக, “ஒரு மத்திய அரசு வேலைக்கு 10 சதவீத குறிப்பிட்ட நபர்கள் மட்டும் தான் செல்ல முடிகிறது. 90 சொந்த மாநிலம் சார்ந்த மக்களுக்கு வழங்க வேண்டும்” என்றும், வேல்முருகன் வலியுறுத்தினார்.

அப்போது, “குற்றவாளிகளை இளைஞர்கள் கொண்டாடுகிறாா்களே?” என்ற கேள்விக்கு, “குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நபர்களை கொண்டாடுகின்ற போற்றுகின்ற எவரையும் ஆதரிக்க முடியாது. அதனை கண்டிக்கிறோம்” என்றும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *