“ஹிந்தி மொழி படித்தால் தமிழ்நாட்டில் கட்டிட வேலைகளை தான் செய்ய வேண்டும்” என்று அமைச்சர் பேச்சு. “ஆங்கில மொழி படித்தால் அமெரிக்கா, ரஷ்யா, லண்டன், உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்யலாம்” என்று அமைச்சர் பெருமிதம்…
திருவண்ணாமலை மாநகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மிக சிறப்பு வாய்ந்த திட்டம் என்று பேசிய அவர், நம் நாட்டை 253 ஆண்டு காலம் ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் (லண்டன்) நாங்கள் ஆண்டதுதான் தமிழ்நாடு என்றும் ஆனால் எங்கள் நாட்டை விட தமிழ்நாடு மிகுந்த வளர்ச்சி அடைந்த நாடாக தற்போது உள்ளது என்றும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை அந்நாட்டு அரசு செயல்படுத்த உள்ளதாக கூறிய அவர்,
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை ஆங்கிலத்தில் படித்தால் தான் ஜெர்மன்,கனடா, மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சென்று பணி செய்ய முடியும் என்று பேசிய அவர், திருவண்ணாமலை கிராமப் பகுதியில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஆங்கில மொழிகளில் படித்ததன் காரணமாக அமெரிக்கா லண்டன் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணி செய்து வருவதாக பெருமை தெரிவித்தவர், ஆகையால் தான் ஆங்கில மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று இரு மொழி கொள்கையை கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா என்றும் அதனை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து கடைபிடித்து வருவதாக தெரிவித்த அவர்,
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தரக்கூடிய நிதியை தர மறுப்பதாக தெரிவித்த அவர் இந்தி மொழியை படித்தால் தான் நிதி தரப்படும் என்று, இல்லையென்றால் சமஸ்கிருவமாவது படித்தால் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறி வருவதாக தெரிவித்தவர்,
தமிழ்நாட்டில் இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை என்றும் இந்தி மொழியை பள்ளியில் கட்டாயப்படுத்துவதையும் திணிப்பதை தான் எதிர்க்கிறது என்றும்,
இந்தி மொழியை தெரிந்துகொண்டு அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் சென்று இந்தி மொழியில் பேச முடியுமா என ஆவேசமாக பேசிய அவர்,
ஆங்கில மொழியை படிக்காமல் இந்தி மொழியை படிக்கும் மாநிலங்களான டெல்லி, உத்தர பிரதேசம், பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி படித்த அனைவரும் தமிழ்நாட்டில் கட்டிட வேலை, பெயிண்ட் வேலை தார் சாலை அமைக்கும் வேலை, டோல்கேட், உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாகவும் தமிழ்நாட்டில் ஆங்கிலம் படித்த அனைவரும் வெளிநாடுகளில் சென்று வேலை செய்து வருவதாகவும் தெரிவித்த அவர்,
இந்தி படித்தால் தான் தமிழ்நாட்டுக்கு தரக்கூடிய நிதி தரப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கும் நிலையில் பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி கொடுத்தாலும் இந்தி மொழியை கற்க மாட்டோம் என்றும் அதே நேரத்தில் தமிழ் மொழியை மறக்க மாட்டோம் என்றும், அதற்கு ஒரு பிரச்சனை வரும்போது தமிழோடு என்றுக்கும் நான் நிற்பேன் என்று முதலமைச்சர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கூறியது அரசியல் வட்டரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.