Tue. Jul 1st, 2025

காதலியை கொலை செய்தவரை பழிவாங்க காத்திருந்த காதலன்.. முந்திக்கொண்டு காதலனை கொலை செய்த கும்பல்

By Joe Mar17,2025 #gang #murdered #rowdies

காதலியை கொலை செய்தவரை பழிவாங்க காதலன் காத்திருந்த நிலையில், முந்திக்கொண்டு காதலனை ஒரு கும்பல் படுகொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான 25 வயதான அருண் குமார் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் (எ) படப்பை சுரேஷ் ஆகியோர் நேற்று இரவு கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்து இருந்து உள்ளனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, படுத்திருந்த அருண் மற்றும் ரவுடி சுரேஷ் ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருண் பலத்த காயம் அடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் தற்போது உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் இரட்டைக்கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியது அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சுக்கு காப்பி சுரேஷ் என்பது தெரிய வந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலி சாயின்ஷாவை, கேளம்பாக்கத்தில் வைத்து ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்தார். இதனால், காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண், சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த திட்டமானது ரவுடி சுக்கு காப்பி சுரேஷுக்கு தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக, அருண் மற்றும் அவரது சகோதரர் அர்ஜூனன் ஆகியோர் தன்னை கொலை செய்வதற்கு முன்பு, அருண் மற்றும் அவரது சகோதரர் அர்ஜூனன் ஆகியோரை தாம் முதலில் கொலை செய்ய வேண்டும் என சுக்கு காப்பி சுரேஷ் திட்டுமிட்டு வந்து உள்ளார். நேற்று இரவு சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு, அருண் குமார் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனன் ஆகியோரை கொலை செய்ய வந்து உள்ளார்.

அங்கு படுத்திருந்த அருண் குமார் மற்றும் அருண் குமார் உடன்படுத்திருந்த ரவுடி படப்பை சுரேஷ் ஆகியோரை சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட 8 நபர்கள் கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து பப்பி ஓடியுள்ளனர். ஆனால், அங்கு அர்ஜுனனுக்கு பதிலாக அருண்குமாரின் நண்பர் ரவுடி படப்பை சுரேஷ் படுத்திருந்ததால், அவர் மீது கொடூத தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ரவுடி படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருண்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் இந்த கோட்டூர்புரம் இரட்டை கொலை சம்பவம் போலீசாருக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது. இவர்கள் மீது சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்கு உள்ளது. அதே போன்று ரவுடி படப்பை சுரேஷ் மீது சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், கொலை செய்த சுக்கு காப்பி சுரேஷ் என்பவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 17 வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *