“தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்தது மட்டுமில்லாமல், இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது”. என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் 4-வது புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய அவர், தாய் மொழி என்பது கண்ணை போன்றது ஆங்கிலம் என்பது கண்ணில் அணியக்கூடிய கண்ணாடி போன்றது தாய் மொழியை கற்றுக் கொள்ளுங்கள்.
தமிழ் படித்தான் தாய் நாட்டில் உரையாடினான், ஆங்கிலம் படித்தான் உலகத்தோடு உரையாடடுகிறான் அதற்கு எதற்கு மூன்றாவது மொழி எனவும், ஒரு கண் தமிழ், மறு கண் ஆங்கிலம், ஒரு கை தமிழ் மறு கை ஆங்கிலம் இருக்கும்போது மூன்றாவது மொழி எனக்கு எதற்கு எனவும் இருமொழியை சரியாக கற்று கொடுங்கள் அதிலிருந்து அவர்கள் பெருமைப்படுவார்கள் எனவும், கண்ணாடி இல்லை என்றால் கூட இருக்கலாம் ஆனால் கண் இல்லாமல் இருக்க முடியாது எனவும், கண்ணாடி என்பது ஆங்கிலம் அதை கழட்டி வைத்து பிறகு கூட தாய்மொழி என்கின்ற கண்ணோடு வாழ முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நாசா, மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள், உலகத்தில் பெரிய நிறுவனங்களில் தமிழன் இருக்கிறான், தாய் மொழியும் ஆங்கிலம் படித்தவன் தொழில்நுட்பத்தில் வெற்றி பெறுகிறான் எனவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது எனவும், தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்தது மட்டுமில்லாமல் இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
புத்தகம் ஒன்று இல்லையென்றால் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வைரமுத்து என்ற சிறுவன் மேடைக்கு வந்து கலெக்டர் முன்பாக உரையாற்றி இருக்க மாட்டேன் எனவும், திருவள்ளூர் மாவட்டம் உழைப்பாளிகள், உழவர்கள் மாவட்டம் எனவும், தன்னை போன்று கருப்பு தமிழர்கள் குடியிருக்கும் மாவட்டம் , குடிமக்கள் இல்லையென்றால் நான் குடியரசுத் தலைவர் சந்தித்து விருதைப் பெற்று இருக்க மாட்டேன் எனவும், வளையாத முதுகுத்தண்டு சொந்தக்காரன் தமிழன்.
தமிழன் அன்புக்கு மகிழ்ச்சிக்கு உண்மைக்கு நேர்மைக்கு பணிவான் ஆனால் அநீதிக்கு அவன் ஒரு நாளும் வளைய மாட்டான் எனவும், மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் பெறும் மதிப்பெண் ஒரு அடையாள அட்டை தான். அடையாளம் என்பது வீட்டை குறிக்கக்கூடிய முகவரி எனவும், வெளியே படிக்கக்கூடிய புத்தகம் தான் வாழ்க்கையும் தான் உங்கள் முகவரியாக இருக்கும்.
மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போது அவர்களை கல்லூரி படிக்கும் அளவில் புத்தகங்களை படிக்க வைத்தால் பள்ளிக்கல்வி எளிதாகிவிடும் எனவும், குளத்தில் நீந்தியவன் ஆற்றில் நீந்துவது எளிது ஆற்றில் நீந்துவான் கடலில் நீந்துவது எளிது எனவும், படிக்கும்போதே 18 வயது மேற்பட்டவர்கள் படிக்கக் கூடிய புத்தகங்களை படித்துவிட்டால் 12 வயதில் எழுதக்கூடிய தேர்வு எளிது அதற்கான ஆற்றல்களை ஆசிரியர்களும் பெற்றோர்களும் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அழித்த் பேட்டி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.