Tue. Jul 1st, 2025

“துரு விக்ரம் எனக்கு போட்டி தான்!” நடிகர் சியான் விக்ரம் சரவெடி..

“மகனாக இருந்தாலும் நடிகர் துரு விக்ரம் எனக்கு போட்டி தான்” என்று, “வீர தீர சூரன்” படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம் சரவெடியாக பேசியது, பலரது கவனத்தையும் பெற்று உள்ளது.

கோவை மலுமிச்சாம்பட்டி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் இயக்குனர் அருண் குமார் இயக்கிய “வீர தீர சூரன்” படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் சியான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு, கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றினர்.

மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விக்ரம் “நாளை மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் “வீர தீர சூரன் படம்” வெளியாகிறது. காலி கலைவாணி ரொமான்ஸ் -காக இந்த படத்தை பாருங்கள். காதலித்தால் மட்டும் போதாது. பாதுகாக்க வேண்டும்.

காதல் என்பது மிக முக்கியம். அவங்களுகாக கேர் பண்றது ரொம்ப முக்கியம். அதற்காக இந்த படத்தை பாருங்கள். சாமி படத்தில் பண்ணுன ரொமான்ஸ், இந்த சாமி கூட நான் பண்ணிட்டேன். இது ஒரு ரொமான்டிக் படம், அதற்காக பாருங்கள்.

இந்த படத்தின் ஸ்பெசல், ஆரம்பமே வெற மாதிரி இருக்கும். இது வரை நடித்த படத்தை விட, இந்த படம் நன்றாக இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது, நான் ரொம்ப நல்ல பையன். நான் சிறுவனாக இருக்கும் போது வாடகை வீடு தான். நான் சாதிக்க வேண்டும் என கனவு கண்டேன். சாதித்து விட்டேன். ஒரே வாழ்க்கை” என்று, நடிகர் விக்ரம் பேசினார்.

தொடர்ந்து பேசிய நடிகை துஷாரா, “எனக்கு ஒரே ஒரு கனவு தான் இருந்தது. நடிகையாக ஆக வேண்டும் என, ஆகிவிட்டேன்.

இதனையடுத்து, நடிகர் விக்ரமிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நடிகர் துரு விக்ரம், எப்படி இருக்கார்? என்ற கேள்விக்கு பதில் அளித்த விக்ரம், நடிகர் என்று சொன்னால் நான் பதில் சொல்ல மாட்டேன். அவர் எனக்கு போட்டி நடிகர். என்னுடைய பையன் நன்றாக இருக்கான் என விக்ரம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விக்ரம் மற்றும் துஷாரா ஆகியோர், மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு நடனமாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

By Joe

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *