IPL2025: லக்னோ vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நடந்தது என்ன? என்பதை பார்க்கலாம்..
லக்னோ vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், ஹைதராபாத் அணியை வீழ்த்தி, லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆனால், ஒரு கட்டுத்தனமான அணி என்று பெயர் பெற்ற ஹைதராபாத் அணியை, எப்படி லக்னோ அணி வீழ்த்தியது என்பது தான் இங்கே மில்லியன் டாலர் கேள்வியாக பலருக்கும் இருக்கிறது..
அதாவது. டாஸ் ஜெயித்து நாங்கள் பவுலிங் போடுகிறோம் என்று பண்ட் சொன்னபோது, கிட்டத்தட்ட அனைவருமே அதிர்ந்து தான் போனார்கள். இந்த காட்டானுக கிட்ட எதுக்குய்யா பேட்டிங் கொடுத்தான்னு ரிஷப்பை திட்டாதவர்களே கிடையாது. ஹைதராபாத் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் நாங்கள் சேஸ் செய்வோம் என்று கான்பிடண்டாக சோனதை செய்து காட்டியிருக்கிறது லக்னோ அணி.
ஏலத்தில் விலை போகாத ஒரு வீரன், ரீபேளேஸ்மெண்டாக வந்து அதிக விக்கெட் வீழ்த்திய பர்ப்பிள் கேப் ஹோல்டராக இருப்பதெல்லாம் சினிமாவுக்கான ஸ்கிரீன்ப்ளே. ஆனால், லார்ட் தாக்கூர் அதை செய்து காண்பித்திருக்கிறார். எப்படியாவது விக்கெட் எடுத்து விடும் திறமை அவரிடம் இருக்கிறது. அபிஷேக், இஷானின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தி ரிஷ்ப் மற்றும் லக்னோ ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.
ஒரு பக்கம் விக்கெட் போனாலும், வரவன் எல்லாம் அடிக்கறாங்க. அனிகெட் ஷர்மானு ஒரு பையன். வந்தான், அடிச்சான், சிக்ஸ், வந்தான் அடிச்சான் சிக்ஸ் ரிபீட்டு. 5 சிக்ஸ் அடிக்கறான். பேட் கம்மின்ஸ் 3 பால்ல 3 சிக்ஸ் அடிக்கறான். காட்டான்கள் டீம் என்பது சரியாக இருக்கிறது.
லக்னோவும் பேட்டிங்கில் சளைத்தவர்களல்ல. டி 20 சூப்பர்ஸ்டார் ப்ளேயரான நிகோலஸ் பூரனின் அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இருந்தது. ஆளு பாக்கத்தான் டம்மி பீஸ் மாதிரி இருப்பான். ஆனா ஒவ்வொரு சிக்ஸும் 90மீட்டர் தாண்டி விழுது. தட் 2 பனை மரம் உயரத்துக்கு அடிக்கறான் மொமண்ட். 190 டார்கெட்டை 16 ஓவரில் அடித்து, ஹைதராபாத் அணியை வெறுப்பேற்றிய ரிஷபுக்கு வாழ்த்துகள்.
– மகாதேவன் சி