80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நாகராஜனுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு உள்ள சம்பவம் பேசும் பொருளாக மாறி உள்ளது.
அதீத மதுபோதையில் தவறு செய்துவிட்டேன் என்று, குற்றம்சாட்டப்பட்டவர் என்ன கூறுகிறார்? என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்..
இது குறித்து போலீசாரின் விசாரணையில், “திருவள்ளூரில் இருந்து விளம்பர போர்டுகளுக்கு பிரேம் வொர்க் செய்யும் வெல்டிங் வேலைக்காக வந்தாகவும், மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற போது மூதாட்டியை பார்த்ததாகவும், பணம் பறிக்கும் நோக்கில் சென்று மூதாட்டியிடம் பணம் கேட்டு, அவர் இல்லையென கூறிய நிலையில் மது போதையில் சபலத்தால் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும்” அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
நாகரானுக்கு திருமணமாகி ஒரு பெண், ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த சம்பவத்தில் போலீசார் கைது செய்த நிலையில், நாகரான் தப்பி ஓடிய போது தவறி விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சிகிச்சை அளீக்கப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அத்துடன், கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதி..
அதே போல், சென்னையில் மற்றொரு நிகழ்வாக, 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர், கணவர், மாமனார், மாமியார், மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சிறுமி வயதை மறைத்து 18 வயது என பொய் சொல்லி திருமணம் செய்து வைத்த நிலையில் சிறுமி கரு கலைந்ததால் கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
அதாவது, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பிடித்து வந்த சிறுமியை அவரது பெற்றோர் 18 வயது ஆகி விட்டதாக பொய் சொல்லி வியாசர்பாடி கக்கன்ஜி நகரை சேர்ந்த 23 வயதுடைய இளைஞருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறுவாபுரி கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து சிறுமி தனது மாமியார் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் அவர் கருவுற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் கரு கலைந்ததால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மற்றும் அவரது பெற்றோர் கொடுமை படுத்தி வந்தாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்து சென்னை மாவட்ட சமூக அலுவலர் தமிழ் கொடி நேரில் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் பெற்றோர் அவரது வயதை மறைத்து திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து மாவட்ட சமூக அலுவலர் தமிழ் கொடி இது குறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சிறுமியின் தாய் , தந்தை, கணவர், மாமனார், மாமியார், உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடை சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.